பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13,000 கிராமங்களில் இருந்து மண் எடுத்து, ஜாலியன் வாலாபாக்கில் புதிய நினைவுச்சின்னம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:-
மாநிலம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் இருந்து நினைவுச் சின்னத்துக்கான மண் பெறும் பணியை ஒருங்கிணைக்கும் அமைப்பாக ஊரக வளர்ச்சித்துறை செயல்படும். கடந்த 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, சீக்கிய விழாவைக் கொண்டாடும் வகையிலும், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு அமைதியான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும், அமிருதசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அங்கு படைகளுடன் வந்த பிரிட்டீஷ் காலனல் ஜெனரல் டையர் உத்தரவின் பேரில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் 100ம் ஆண்டு நினைவையொட்டி சிறப்பு நினைவகம் ஒன்றை கட்டுவதற்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13,000 கிராமங்களில் இருந்து மண் எடுத்து, ஜாலியன் வாலாபாக்கில் புதிய நினைவுச்சின்னம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.