Punjab Board 10th Topper Aditi: கடின உழைப்புக்கு நிச்சயம் வெற்றி உண்டு. இதன் அடிப்படையில், ஒருவர் தனது கனவுகளை நோக்கி நீண்ட காலத்திற்கு கடினமாக உழைத்தால் வெற்றிக்கான தீர்வு காண முடியும். அப்படி ஒரு கடின உழைப்பாளி பெண்ணை பற்றி பார்ப்போம். அவள் பெயர் அதிதி. பத்தாம் வகுப்பு மாணவி. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெல்ல முடியும் என்பதை நிரூபித்த அவரின் கதையை அறிந்து கொள்ளுவோம்.
பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் 10வது வகுப்பு தேர்ச்சி விகிதம்
பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி) இன்று 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.2% ஆகும். மொத்த தேர்ச்சி விகிதத்தில் 98.11 சதவீத தேர்ச்சி பெற்று விட மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்கள் 96.47% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10வது வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகள்
அதிதி, அலிஷா ஷர்மா மற்றும் கர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் சிறந்த மதிப்பெண்ணை பெற்று சாதனையாளர்களாக உயர்ந்துள்ளனர். அதிதி 650க்கு 650 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி சதவீதமாக 100% பெற்றுள்ளார். அலிஷா ஷர்மா மற்றும் கர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா 645 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
100 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாணவி அதிதி சாதனை
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் அதிதி, பஞ்சாப் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தது மட்டுமின்றி, 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் போர்டு தேர்வில் அதிதி மாணவி 650க்கு 650 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதிதியின் தந்தை சிறிய பான் கடை நடத்தி வருகிறார். அவரது தாய் இல்லத்தரசி. சாதாரண குடும்பத்தை சேர்ந்த அதிதி ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
மேலும் படிக்க - பிள்ளைகளுக்கு தேர்வு பயமா... பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆசிரியர்களின் அட்வைஸ்!
மாணவி அதிதிக்கு டாக்டர் ஆக ஆசை
லூதியானாவின் சிம்லாபுரியில் உள்ள தேஜா சிங் இன்டிபென்டன்ட் சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவியான அதிதி கூறுகையில், போர்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன் என்று எனக்கு தெரியும், நம்பிக்கை இருந்தது. ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பேன் என்று நான் எதிர் பார்க்கவில்லை என ஆச்சரியத்துடன் கூறினார். எதிர்காலத்தில் மருத்துவம் படித்து, 'காஸ்மெடிக் சர்ஜன்' ஆக விரும்புவதாக மாணவி அதிதி கூறினார்.
விடுமுறை நாட்களில் இரவு முழுவதும் படித்த மாணவி அதிதி
அதிதி தான் பெற்ற வெற்றிக்கான முழுக் கிரெடிட்டையும் தன் பெற்றோருக்கு அர்ப்பணித்தால். பொருளாதாரரீதியாக குடும்பம் மிகவும் வலுவாக இல்லாவிட்டாலும், அவரது பெற்றோர்கள் மாணவி அதிதியின் படிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அதிதி தினமும் 5 மணி நேரம் படித்திருக்கிறார். தேர்வுக்கு முந்தைய விடுமுறை நாட்களில் படிப்பில் அதிக கவனம் செலுத்தி உள்ள. தேர்வு காலத்தில் இரவு முழுவதும் படித்து, தனது வெற்றியை பதித்துள்ளார்.
அதிதிக்கு நடனம் மற்றும் ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும்.
படிப்பை போல விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் அதிதி. அவர் மாவட்ட அளவில் கிரிக்கெட் மற்றும் மாநில அளவில் சாப்ட்பால் விளையாடுகிறார். கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார். அதிதிக்கு நடனம் மற்றும் ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும்.
பஞ்சாப் போர்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள்
ரேங்க் 1
அதிதி (650 மதிப்பெண்கள், 100% தேர்ச்சி) தேஜா சிங் இன்டிபென்டன்ட் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளி, சிம்லா பூரி (லூதியானா).
ரேங்க் 2
அலிஷா ஷர்மா (645 மதிப்பெண்கள், 99.23% தேர்ச்சி) தேஜா சிங் இன்டிபென்டன்ட் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளி, சிம்லா பூரி (லூதியானா).
ரேங்க் 3
கர்மன்ப்ரீத் கவுர் (645 மதிப்பெண்கள், 99.23% தேர்ச்சி) ஆம்பர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, நவன் டேனல், தெஹ் பாபா பகாலா (அமிர்தசரஸ்).
மேலும் படிக்க - CBSE முக்கிய அறிவிப்பு.. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ