தூங்க விடாமல் கூவும் சேவல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்...

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், பெண்மணி ஒருவர் தன் வீட்டு அருகில் இருக்கும் சேவல் தன்னை தூங்க விடாமல் தினமும் கூவி தொல்லை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்!

Last Updated : May 27, 2019, 12:29 PM IST
தூங்க விடாமல் கூவும் சேவல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்... title=

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், பெண்மணி ஒருவர் தன் வீட்டு அருகில் இருக்கும் சேவல் தன்னை தூங்க விடாமல் தினமும் கூவி தொல்லை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் சோம்வார் பெத் பகுதியை சேர்ந்தவர் சுமந்தா திவாரி. இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் சேவல் ஒன்று தினமும் தன்னை தூங்க விடாமல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்து சாமர்த்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட சேவல் மற்றும் சேவலின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடுட்டுள்ளார்.

இது குறித்து சாமர்த்து காவல்நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில்., புகார் அளித்த பெண்மணி வீட்டை சென்றடைந்து விசாரிக்கையில்., புகார் அளித்த சுமந்தா திவாரி அப்பகுதியை சேர்ந்தவர் இல்லை எனவும், சம்பவத்திற்கு சில நாட்கள் முன்பு அவரது சகோதரி வீட்டிற்கு வந்தார் எனவும்., அப்போதே இந்த பிரச்சனை நிகழ்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்த சுமந்தாவின் சகோதரியிடன் கேட்கையில் "தனது சகோதரி முன் கோபி, சில விஷயங்களில் இவ்வாறான மூர்க்கத்தனமான முடிவுகளை எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளித்த சுமந்தா, புகார் அளித்ததன் பின்னர் தனது சகோதரியின் வீட்டை விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுமந்தா அளித்த புகார் மீது அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News