மத்திய பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை நீக்கி உள்ளாடையுடன் நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்காண்ட் மாவட்டத்தில் விவசாயிகள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து ஆடைகளை கலைத்து அரை நிர்வாணத்துடன் அவர்களை போலீசார் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் மீது கற்களை கொண்டு தாக்கியதால் பலர் காயம் அடைந்துள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை நீக்கி உள்ளாடையுடன் நிற்க வைத்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
Protesting farmers allegedly stripped and thrashed by Police in Madhya Pradesh's Tikamgarh; CM Shivraj Singh Chouhan orders probe. pic.twitter.com/OBb6RHtopR
— ANI (@ANI) October 4, 2017