மத்திய அரசு புதியதாக அக்னிபாத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ராணுவத்தில் ஆட்களை சேர்க்கும் மத்திய அரசின் நான்கு ஆண்டு திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 17.5 வயது முதல் 21 வயது வரை ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாக கண்டித்துள்ள வட மாநிலத்தினர், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்காததால் வட மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்கிறது. ஏற்கனவே சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பீகாரில் மட்டும் பல ரயில் நிலையங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
மேலும் படிக்க | தொடங்கியது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் - இலக்கு என்ன ?
இதற்கிடையில், பக்சர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். மொஹியுதி நகர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், ரயில் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், இளைஞர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அமைதி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பிரியங்கா காந்தி,
"மத்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டம் நாட்டின் இளைஞர்களையும், நமது ராணுவத்தையும் முற்றிலும் அழித்துவிடும் சக்தி கொண்டது. போலி தேச பக்தர்களையும், தேசியவாதிகளையும் இளைஞர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் வந்துவிட்டது. அவர்களின் முகத்திரை கிழிந்துவிட்டது.
இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததன் காரணத்தை அறிந்து அதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டின் உண்மையான முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதை நிலைநிறுத்த வேண்டும்.
இளைஞர்களை விட சிறந்த தேச பக்தர்கள் யாரும் கிடையாது. இந்தப் போராட்டத்தில் உங்களுடன் காங்கிரஸும், இந்த நாடும் உறுதுணையாக இருக்கிறது. போராட்டத்தை கைவிடாதீர்கள். ஆனால் அமைதி வழியில் தொடர்ந்து போராட்டம் நடத்துங்கள். நாட்டையே சீரழிக்கும் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிவதே உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்." என பேசினார்.
மேலும் படிக்க | 8 மாதங்களில் கட்டடம்- 4 ஆண்டுகளாக ஒற்றை செங்கல்: வைரலாகும் சு.வெங்கடேசனின் பதிவு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR