தற்போது ஹைதராபாத்தில் இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள டப்பாச்சபுத்ராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழு வயதான சிறுவனை பள்ளியின் முதன்மை ஆசிரியர் இரக்கமின்றி அடித்துள்ளார்.
பள்ளியின் முதன்மை ஆசிரியர் சுரேஷ் சிங், சில வார்த்தைகளை படிக்கும்படி குழந்தையை கேட்டார். குழந்தை வாசிக்க முடியவில்லை. இதனால் அந்த மாணவனை கொடூரமாக தாக்கி உள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 'பாலலா ஹகுலா சங்கம்' பள்ளியின் முதன்மை ஆசிரியர் சுரேஷ் சிங் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், பள்ளி அங்கீகாரம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Principal of a school in Hyderabad booked for allegedly beating up a 7-year-old student, case registered under sec 23 Juvenile Justice Act pic.twitter.com/AfQY5vN7mr
— ANI (@ANI) September 10, 2017
இதைக்குறித்து பெற்றோர் போலீசிடம் புகார் தெரிவித்துள்ளனர். டப்பாச்சபுத்ரா காவல் நிலையம் பிரிவு 341 (தவறான கட்டுப்பாடு) மற்றும் பிரிவு 323 (தன்னளவில் காயம் ஏற்பட்டுள்ளது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை முதன்மை ஆசிரியரை கைது செய்யப்படவில்லை.