இன்று யுஎன்ஜிஏவின் 74வது அமர்வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 27, 2019, 09:32 PM IST
இன்று யுஎன்ஜிஏவின் 74வது அமர்வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி title=

19:54 27-09-2019
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் சிறந்த கவிஞர் கணியன் பூங்குன்றனார், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழில் கூறினார், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என தமிழ் மொழியை மேற்கோள் காட்டி யுஎன்ஜிஏவின் 74வது அமர்வில் பேசினார்.


19:51 27-09-2019
வரவிருக்கும் 5 ஆண்டுகளில், தொலைதூர கிராமங்களில் 1.25 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகளை அமைக்க உள்ளோம்: பிரதமர்


19:50 27-09-2019
2022 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆம் ஆண்டு விழா கொண்டாடும் போது, ஏழைகளுக்காக மேலும் 2 கோடி வீடுகளை கட்டப் போகிறோம்: பிரதமர் மோடி


19:49 27-09-2019
வரவிருக்கும் 5 ஆண்டுகளில் நீர் பாதுகாப்பை ஊக்குவிப்பதோடு, 15 கோடி வீடுகளை நீர் விநியோகத்துடன் இணைக்கப் போகிறோம்: பிரதமர்


19:44 27-09-2019
உலகத்தில் இருந்து காசநோய்யை முற்றிலும் அகற்ற 2030 வரை இலக்கு வைத்துள்ளார்கள். ஆனால் 2025-க்குள் இந்தியாவில் காசநோய் இருக்காது: பிரதமர் மோடி


19:43 27-09-2019
இந்தியா ஒரு சிறந்த கலாச்சாரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, இது அதன் சொந்த துடிப்பான மரபுகளைக் கொண்டுள்ளது, இது உலகளாவிய கனவுகளை உள்ளடக்கியது. எங்கள் கலாச்சாரம், எங்கள் வாழ்வோடு இணைந்துள்ளது: பிரதமர்


19:42 27-09-2019
வெறும் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன: பிரதமர் மோடி


19:41 27-09-2019

 


19:40 27-09-2019


19:34 27-09-2019
யுஎன்ஜிஏவின் 74வது அமர்வில் பிரதமர் மோடியின் உரை தொடங்கியது.

 


19:31 27-09-2019
பிரதமர் மோடி யுங்காவில் காலநிலை மாற்றம் குறித்தும் பேசுவார்


19:30 27-09-2019
யு.என்.ஜி.ஏ சர்வதேச மாநாட்டில் பயங்கரவாதம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார்.


19:23 27-09-2019
பிரதமர் மோடியின் உரை யு.என்.ஜி.ஏவில் இன்னும் சிறிது நேரத்தில் நடைபெற உள்ளது.

 


நியூயார்க்: ஐக்கிய நாடுகள் (UNGA) சபையின் 74 வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றவுள்ளார். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு பிரதமர் மோடி (PM Modi) உரை நிகழ்த்துவார். பிரதமர் மோடி தனது உரையின் போது பாகிஸ்தானின் (Pakistan) பெயரை குறிப்பிடாமல் பயங்கரவாதம் (Terrorism) மீது தாக்குதல் நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கிறது. பிரதமர் மோடியின் உரை மூன்று நாடுகளின் தலைவர்களுக்குப் பிறகு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 74வது அமர்வு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் இந்த அமர்வில் உரையாற்றவுள்ளனர். பிரதமர் மோடி உரையாற்றிய பின்னர் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரை இருக்கும். பிரதமர் மோடிக்கு முன், மொரீஷியஸின் ஜனாதிபதி, இந்தோனேசியாவின் துணைத் தலைவர் மற்றும் லிசோதோ பிரதமர் ஆகியோர் இந்த அமர்வில் உரையாற்றுவார்கள். பிரதமர் மோடியின் உரை நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏழாவது இடத்திலும் உரையாற்றவுள்ளனர்.

Trending News