வங்கதேசத்தில் மூன்று கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இந்திய பிரதமரின் டாக்கா பயணம் ரத்து செய்யப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது தொடர்பான அறிவிப்பு உறுதிபடுத்தப்பட்டு விரைவில் வெளியிடப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச நிறுவனர் என்று அழைக்கப்டும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வங்கதேசத்திற்கு பிரதமர் மோடி மார்ச் 17 அன்று செல்லவிருந்தார். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் நடைபெறவிருந்தது., இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பிரதமர் மோடி தனது டாக்கா பயணத்தை ரத்து செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நூற்றாண்டு விழாவின் பிரமாண்ட கொண்டாட்டத்தை வங்கதேசம் குறைத்து வருகிறது மற்றும் சுகாதார கவலைகள் காரணமாக வெளியுறவு செயலாளர்களின் பங்கேற்பை ரத்து செய்துள்ளது.
சமீபத்தில் இத்தாலி பயனம் மேற்கொண்ட, வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இருவரில் ஒருவரது குடும்பத்தை சேர்ந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று என நாட்டில் மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது வங்கதேசத்திலும் கொரோனா தொற்று வெடித்துள்ளநிலையில் பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்யகூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் டாக்க பயணம் ரத்து செய்யப்டும் பட்சத்தில் இது பிரதமர் மோடியால் ரத்து செய்யப்படக்கூடிய இரண்டாவது பயணம் ஆகும். முன்னதாக, கொரோனா வைரஸின் உலகளாவிய பரவலைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் உச்சி மாநாடு நடத்த பிரஸ்ஸல்ஸிற்கான தனது பயணத்தையும் அவர் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (NRC) ஆகியவற்றிற்கு எதிராக வங்கதேசத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதையும், பிரதமர் ஹசீனா மோடியின் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் 'எந்தவொரு அசம்பாவித சூழ்நிலையையும்' கையாளும் திறன் கொண்டவை என்று உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு குறித்த வங்கதேசத்தின் கவலைகளை உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.