புது டெல்லி: வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பங்கு வகித்ததாக UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், இப்போது கர்ப்பமாக இருக்கும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவி சபூரா ஜார்கர் (வயது27) திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன.
சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னர், அவரது கணவர் அவருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது முறையாக பேசினார். நான்கு நிமிடங்கள் நீடித்த அந்த உரையாடலில், அழைப்பு இரண்டு முறை தடையானது. இந்த உரையாடலின் பெரும்பகுதி அவரது பெற்றோர் மற்றும் மாமியார் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றிதாகவே இருந்தது.
பிப்ரவரி 22-23 தேதிகளில் டெல்லியில் உள்ள ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் கீழ் சிஏஏ (CAA) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை முற்றுகையை ஏற்பாடு செய்தவர்களில் இவரும் தொடர்பு இருப்பதாக கூறிய டெல்லி போலீசார், ஏப்ரல் 13 ஆம் தேதி சபூரா ஜார்கர் (Safoora Zargar) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நேரத்தில், சபூரா 13 வார கர்ப்பமாக இருந்தார்.
ஜார்கரின் வழக்கறிஞர் தில்லி நீதிமன்றத்தில், அவருக்கு ஜாமீன் கோரியதுடன், அவர் மீது பொய்யான குற்றச்சாற்று சுமத்திருப்பதாகவும், எஃப்.ஐ.ஆரில் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறினார். அவர் மூன்று மாத கர்ப்பிணி என்றும், சிஆர்பிசியின் பிரிவு 437 ன் விதிமுறையின் அடிப்படையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்படலாம். இதேபோன்ற குற்றம் தொடர்பான மற்றொரு எஃப்.ஐ.ஆரில், அவர் ஏற்கனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. எனினும், அவரின் ஜாமீன் அது நிராகரிக்கப்பட்டது.