மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சி தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டமானது சுமார் 4 மணி நேரம் நீடித்ததாக தெரிகிறது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரபல தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | பாஜக பிரமுகர் காருக்கு தீ வைக்கப்பட்டதா? போலீஸ் அதிரடி
முன்னதாக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் இணைவது பற்றிய பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் இவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றது, காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டதை ஊர்ஜீதப்படுத்துகிறது.
#UPDATE Congress party meeting held at the residence of party chief Sonia Gandhi in Delhi has ended. The meeting lasted for almost 4 hours, Prashant Kishor has given a presentation to the leaders, KC Venugopal will brief about it.
— ANI (@ANI) April 16, 2022
இந்த 4 மணி நேர சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், 2024ஆம் ஆண்டு தேர்தல் வியூகம் குறித்த விரிவான விளக்க அறிக்கையை காங்கிரஸ் தலைவரிடம் பிரசாந்த் கிஷோர் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், பிரசாந்த் கிஷோர் முன்வைத்த செயல்திட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் அமைக்கப்படும் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின்னரே கட்சியின் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!