அமைச்சர்கள் ஆடம்பரத்தை தவிருங்கள் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 5 ஸ்டார் விடுதிகளில் தங்குவதைத் தவிர்க்குமாறும், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அமைச்சகங்களின் உபயோகத்திற்கு உள்ள கார்களைப் பயன்படுத்துவது போன்ற சலுகைகளைத் தவிர்க்குமாறும் பாஜக அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர்களை டெல்லியிலேயே தங்கும்படி மோடி கூறி இருந்தார். பின்னர் அவர்களை சந்தித்து சில அமைச்சர்களின் ஆடம்பரம் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் யாரும் பொதுத்துறையிடமிருந்து எந்த வித சலுகையோ அன்பளிப்போ வசதியோ பெறக்கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வர இருக்கும் நிலையில் ஊழலற்ற அரசு என்ற நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள ஆடம்பரத்தை தவிர்க்குமாறு பிரதமர் தமது சகாக்களிடம் வலியுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.