மூன்று புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி!

நாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 3 புதிய கேபினட் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.

Last Updated : Jun 5, 2019, 10:06 PM IST
மூன்று புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி! title=

நாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 3 புதிய கேபினட் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.

இந்த மூன்று குழுக்கள் முறையே பாதுகாப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சி, வேளைவாய்ப்பு மற்றும் தொழில்வளர்ப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று குழுவிற்கும் பிதரமர் மோடியே தலைமை தாங்குவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நாட்டின் பாதுகாப்பிற்கான கேபினர் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேப்போல் முதலீடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான கேபினட் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவது கேபினட் குழுவான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவில் 10 பேர் இடம்பிடித்துள்ளனர். அதன்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமர், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் தர்மேந்திர ப்ரதான், திறன் மற்றும் தொழில்மேன்மையாக்கல் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் மாநிலத்திற்கான அமைச்சர் சந்தோஷ் குமார் கங்காவர், ஹர்ப்ரீத் சிங் பூரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி கடந்த காலாண்டில் 5.8%-மாக வீழ்ந்ததன் காரணமாக அமைச்சரவையில் குறிப்பிட்ட மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News