ஜப்பானில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!! நாடு திரும்பினார் பிரதமர் மோடி

13-வது இந்திய - ஜப்பான் வருடாந்திர மாநாட்டை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2018, 07:20 AM IST
ஜப்பானில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!! நாடு திரும்பினார் பிரதமர் மோடி title=

13-வது இந்திய - ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க கடந்த 28 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். வருடாந்திர மாநாட்டில் நடைபெற்ற டோக்கியோ நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. 

வருடாந்திர மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு, விண்வெளி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என இந்தியாவும், ஜப்பானும் தீர்மானித்திருகிறது. இந்தியாவில் சுமார் 18 ஆயிரத்து கோடி ரூபாய் வரை முதலீடு செய்யபோவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. 

மேலும் இந்தாவில் தொலை தொடர்பு துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், நாட்டில் முன்னேற்ற பாதைக்கு பெருமளவில் உதவி புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2022-ஆம் ஆண்டிற்குள் தொலைதொடர்பு துறையில் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வரையில் உயரும் எனவும், சுமார் 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை இளம் சமுதாயத்திற்கு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்துகொண்டு நமது நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மிகப்பெரும் மாற்றத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. மனித நேயத்தோடு இந்தியா செய்யும் முயற்சிகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றனர் எனக் கூறினார்.

பின்னர், தனது ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.

Trending News