இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் குறித்து நானும், மகிந்த ராஜபக்சவும் விவாதித்தோம்; இலங்கை தமிழர்களின் தேவைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சே, டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அவரை வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவும், இலங்கை பிரதமர் ராஜபக்சே தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியையும், ராஜபக்சே சந்தித்துப் பேச்சுநடத்தினார். இதையடுத்து, தொடர்ந்து மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட அதிகாரிகள் முழு கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். மோடி மற்றும் ராஜபக்சே இடையேயான சந்திப்பின் போது இந்தியா-இலங்கை இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டது. வர்த்தகம், முதலீடுகள் குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்து, இந்தியா-இலங்கை இடையேயான சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசுகையில்... "இந்தியாவும், இலங்கை நெருங்கிய நட்பு நாடுகள். நமது உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சர்வதேச விவகாரங்கள் குறித்தும், பொருளாதார திட்டங்கள், வர்த்தகம் முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இலங்கையின் வளர்ச்சிக்கு, இந்தியா தனது பங்களிப்பை செய்துள்ளது.
PM Modi urges Sri Lanka to ensure equality, justice for Tamils
Read @ANI story | https://t.co/F8P5xoCNBL pic.twitter.com/xfTdI0DrH6
— ANI Digital (@ani_digital) February 8, 2020
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயத்தில் நடந்த தாக்குதல், மனிதநேயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பயங்கரவாதத்தை ஒழிப்பதில், இலங்கை துடிப்பாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்கு எதிராக இரு நாடுகளும் வலிமையுடன் போராடி வருகின்றன. பயங்கரவாத்திற்கு எதிரான போரை இன்னும் அதிகரிப்போம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்" என அவர் கூறினார்.