டெல்லி ஜன்பத் சாலையில் அமைந்துள்ளன அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவாக டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் அமைப்பதற்கு தேசிய கமிட்டி பரிந்துரை செய்தது.
இதனைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு அம்பேத்கர் சர்வதேச மையத்துடன் அம்பேத்கர் தேசிய பொது நூலகம் அமைக்க முடிவு செய்து அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அம்பேத்கர் சர்வதேச மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி நடைபெற்றது. அவ்விழாவிற்கு பிரதமர் நரேதிர மோடி அடிக்கல் நாட்டினார்.
அதை தொடர்ந்து,கடந்த இரண்டு வருடங்களாக இதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களை பதிவிட்டிருந்தார். அதில் நவீன கலை வடிவத்துடன் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரம்மாண்டமான வடிவமைப்பில் இந்தக் கட்டடத்தை அம்பேத்கருக்கு சமர்பிக்க உள்ளதாக அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். மேலும்,அவர் நமது தேசிய தலைநகரின் இதயத்தில், அம்பேத்கருக்கு இது பொருத்தமாக அஞ்சலி என்றும் தெரிவித்துக்கொண்டார்.
தற்போது இது தொடர்பாக திறப்பு விழாவில் இன்று அவர் கூறுகையில்.- பாபா சாகேப் அம்பேத்கரின் கட்டடத்திற்கான பங்களிப்பு நாட்டின் மிக முக்கியமானவை என்றார். ஏன் என்றால் இது இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் அசல் சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.இதில் மூன்று தியேட்டர்கள் மற்றும் பணக்கார டிஜிட்டல் களஞ்சியத்துடன் விரிவான நூலகம் உள்ளன என்றும் கூறினர்.
மேலும், அவர் இந்த மண்டபத்தில் பிரதம மந்திரி சென்டர் கட்டிடம் புத்த மற்றும் தற்போதைய கட்டிடக்கலை ஒரு இணைவு என்று கூறினார்.
Prime Minister Narendra Modi inaugurates Dr. Ambedkar International Centre in Delhi pic.twitter.com/Kf3l5vxlZx
— ANI (@ANI) December 7, 2017