பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திங்கள்கிழமை (செப்டம்பர் 14) மழைக்கால நாடாளுமன்ற அமர்வு (Monsson Session) தொடங்குவதற்கு முன்னதாக ஊடகங்களில் உரையாற்றியதோடு, நாடாளுமன்றத்தின் (Parliament) தற்போதைய அமர்வு முன்னெப்போதும் கண்டிறாத ஒரு நெருக்கடியான காலத்தில் நடைபெறுகிறது என்றும் கூறினார்.
"இந்த நாடாளுமன்ற அமர்வு ஒரு தனித்துவமான காலத்தில் தொடங்குகிறது. இப்போது கொரோனாவும் இருக்கிறது கடமையும் இருக்கிறது. எம்.பி.க்கள் கடமைக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தனர். நான் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை மாநிலங்களவையும் மக்களவையும் ஒரு நாளில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். அமர்வுகள் சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நடைபெறும். அனைத்து எம்.பி.க்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர் "என்று பிரதமர் கூறினார்.
ALSO READ: BIG NEWS: கொரோனா தடுப்பூசி சந்தை குறித்து ஹர்ஷ்வர்தன் கூறியது என்ன?
LAC-யில் பணியில் உள்ள படையினரைப் பிரதமர் பாராட்டினார். மேலும் தேசிய ஒருமைப்பாட்டைப் பொறுத்தவரை அனைத்து எம்.பி.க்களும் LAC-ல் இருக்கும் ஆயுதப்படைகளுக்கும் வீரர்களுக்கும் ஆதரவாக நிற்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். "நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், நாடு நம் வீரர்களுடன் உள்ளது என்ற ஒரு தெளிவான செய்தியைக் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸை (Corona Virus) சமாளிக்க ஒரு தடுப்பு மருந்து கிடைக்கும் வரை மக்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். "தடுப்பு மருந்து வரும் வரை எச்சரிக்கைத் தேவை. உலகின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து ஒரு தடுப்பு மருந்து விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். நமது விஞ்ஞானிகள் வெற்றி பெறுவார்கள். அனைவரையும் இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியே கொண்டு வருவதில் நாமும் வெற்றி பெறுவோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கொரோனா வைரஸ் துவங்கிய பிறகு நடக்கும் முதல் நாடாளுமன்ற கூட்டமாகும் இது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஊழியர்களுக்கும் எந்தவிதமான சுகாதார ஆபத்தும் ஏற்படாமல் இருக்க அமர்வை நடத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
"நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வு 2020 செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை விடுமுறை இல்லாமல் நீடிக்கும். இந்த அமர்வு அசாதாரண சூழ்நிலைகளில் நடைபெறுகிறது. நமது அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றும்போது, நாமும் அனைத்து COVID-19 தொடர்பான வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்" என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா (Om Birle) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: அக்டோபருக்குள் இந்தியாவில் 7 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படும்: ஆய்வு