புதுடெல்லி: ஜம்முவின் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துவிட்டது. நிலைமையை நேரடியாக கண்காணித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணோதேவி ஆலயத்தில் கூட்ட நெரிசலினால் ஏற்பட்ட துயரமான சூழ்நிலையை பிரதமர் நேரிடையாக கண்காணித்து வருவதாக பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து மருத்துவ உதவிகளையும் உதவிகளையும் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
புத்தாண்டின் துவக்கத்திலேயே (New Year 2022) நிகழ்ந்த இந்த எதிர்பாராத சோகத்திற்கு பிறகு, கோவிலுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாதா வைஷ்ணோ தேவி பவனில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தத செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை இழந்து வாடுபவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives due to the stampede at Mata Vaishno Devi Bhawan. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 1, 2022
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். இந்த நிவாரணத் தொகை, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
“மாதா வைஷ்ணோ தேவி பவனில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்" என்று பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் திரிகூட மலையில் அமைந்திருக்கும் மாதா வைஷ்ணோ தேவி கோவில் இருக்கும் பகுதியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் இன்று அதிகாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டு தினத்தன்று பக்தர்கள் கூட்டம் (New Year 2022) அதிகமாக இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
Also Read | புத்தாண்டின் முதல் நாளில் செய்யக்கூடாதவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR