ஜனநாயகம் இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும் -ப.சிதம்பரம் கடும் கண்டனம்

P Chidambaram Angry With BJP: ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது என ப.சிதம்பரம் ட்வீட்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 9, 2023, 02:15 PM IST
  • ஜி20 விருந்தினர் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் இடம் பெறவில்லை.
  • "ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும்" -ப.சிதம்பரம்.
  • ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடமில்லை என்றால் அது சர்வாதிகாரமே -சஞ்சய் ராவுத்.
ஜனநாயகம் இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும் -ப.சிதம்பரம் கடும் கண்டனம் title=

புது டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார். அந்த ஜி20 விருந்தினர் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் இடம் பெறாததால், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. அந்த வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் "ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும்" என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகத் தலைவர்களுக்கான அரச விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை வேறு எந்த ஜனநாயக நாட்டு அரசாங்கமும் அழைக்காததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியா, அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன்" என்று ப.சிதம்பரம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க - அரங்கேறியது ‘பாரத்’! இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றுவதற்கான முன்னோட்டமா? அதிர்ச்சி

எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணிப்பு - சஞ்சய் ராவுத் கருத்து:
சிவசேனா (Uddhav Balasaheb Thackeray) எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், "நீங்கள் மன்மோகன் சிங்கை இரவு விருந்துக்கு அழைத்தீர்கள், மன்மோகன் சிங்குக்கு உடல்நிலை சரியில்லை என்பது உங்களுக்குத் தெரியும், அவர் வரப் போவதில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை நீங்கள் அழைக்கவில்லை. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடமில்லை என்றால் அது சர்வாதிகாரமே.

பாஜக செய்யும் தவறை நாங்கள் செய்ய மாட்டிம் -சஞ்சய் ராவுத்
நாட்டில் முக்கிய பெரிய உச்சி மாநாடு நடக்கிறது. எல்லோரையும் அழைத்துப் பேச வேண்டும். 2024ல் எங்கள் அரசு வரும். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்தால் இந்த தவறை செய்ய மாட்டோம். மோடி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் அவரும் அழைக்கப்படுவார்" என உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - ஜி20 மாநாட்டில் தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள்

பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு:
18வது ஜி20 உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லி பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டப மையத்தில் இன்று (செப்டம்பர் 9, சனிக்கிழமை) மற்றும் நாளை (செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது.

ஜி20 சிறப்பு இரவு விருந்து:
இன்று இரவு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில், சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சுமார் 400 வகை உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை பரிமாறப்படும். விருந்தினர்களுக்கு சேவை செய்ய சுமார் 700 பேர் என சமையல்காரர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் இந்தியா தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிறு தானியமான தினைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் உணவுகள் இன்றைய விருந்தில் இடம்பெற உள்ளது.

மேலும் படிக்க - சீனாவின் ஆக்ரமிப்பை கண்டிக்க வேண்டும்! ஜி20யில் விவாதம் கோரி போராடும் திபெத் அகதிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News