வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு மத்திய அரசால் தீர்வு காண முடியாது.. ப. சிதம்பரம் பதிலடி

Congress Plan To Inemployment: நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காங்கிரஸ் ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் தேர்தல் அறிக்கையில் அது வெளிப்படுத்தப்படும் -காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 27, 2024, 02:11 PM IST
  • அனைத்து சமூக, பொருளாதார பிரச்னைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறானது -அனந்த நாகேஸ்வரன்
  • வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காங்கிரஸ் ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டுள்ளது -ப.சிதம்பரம்
  • 'நாற்காலியைக் காலி செய்' பாஜக என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும் -ப.சிதம்பரம்
வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு மத்திய அரசால் தீர்வு காண முடியாது.. ப. சிதம்பரம் பதிலடி title=

P Chidambaram, Congress: அனைத்து சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் அரசால் தீர்க்க முடியாது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்த கருத்து பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய அவர், நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க தனது கட்சியிடம் (காங்கிரஸ்) உறுதியான திட்டம் உள்ளது எனக் கூறியுள்ளார்.

அனைத்து சமூக, பொருளாதார பிரச்னைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனந்த நாகேஸ்வரன் நேற்று கூறியிருந்தார். 

மேலும் படிக்க - 'கண்ணீர்விட்டு கதறினார்...' காங்கிரஸ் டூ பாஜக சென்ற தலைவர் - மறைமுகமாக தாக்கிய ராகுல்

இதற்கு பதில் அளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தனது X  தளப் பதிவில், "மிகவும் திடுக்கிடும் வாக்குமூலத்தை தலைமைப் பொருளாதார ஆலோசகர் அளித்துள்ளார். 'வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசால் தீர்க்க முடியாது' என்று அவர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. பாஜக அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அதுவாக இருந்தால்,, இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. எனவே 'உங்கள் இடத்தை காலி செய்யுங்கள்' என்று பாஜகவிடம் தைரியமாகச் சொல்ல வேண்டும்" எனத் தனது பதிவில் கூறியுள்ளார்.

மேலும் "வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காங்கிரஸ் ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் தேர்தல் அறிக்கையில் அதுக் குறித்து தெளிவாக கூறப்பட்டு உள்ளது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளில் மோடி அரசை காங்கிரஸ் தொடர்ந்து தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News