புதுடெல்லி: சிபிஐ காவல் முடிந்ததால் பி.சிதம்பரம் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையடுத்து மீண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார் ப. சிதம்பரம், மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ப. சிதம்பரத்தை இரண்டு முறை சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், இன்றுடன் சிபிஐ விசாரணை முடிவுற்றதால், அவரை மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார்.
முன்னதாக ஒருவேளை ப. சிதம்பரத்துக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால், அவர் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சிபிஐ கைதுக்கு எதிராக முன் ஜாமீன் வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளதால், இதுவரை அவருக்கு பெயில் கிடைக்காததால், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு அதிகம். இதனால் தான் ப. சிதம்பரம் வரும் திங்கட்கிழமை வரை சிபிஐ காவலிலேயே தொடர முடிவு எடுத்துள்ளார்.