பாராளுமன்ற, சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது

தமிழகத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடைகிறது.

Last Updated : Mar 25, 2019, 08:24 AM IST
பாராளுமன்ற, சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது  title=

தமிழகத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடைகிறது.

தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகின்றன.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4 நாட்களில் மட்டும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 179 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் 29 பேர் பெண்கள் ஆவர். இதேபோன்று 18 சட்டசபை தொகுதிகளுக்கு 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் ஆகும். அந்த வகையில் மீதம் உள்ள திமுக வேட்பாளர்கள் இன்று காலை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.

27-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 29-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை வாபஸ் பெறலாம். அன்று மாலை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

Trending News