அவங்க அப்பாவால் கூட என்னை கைது செய்ய முடியாது: பாபா ராம்தேவ் வீடியோவால் பரபரப்பு

கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை சரியானது அல்ல என்றும், இந்த முறையை ஒதுக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்துள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 27, 2021, 07:48 PM IST
  • அலோபதி மருத்துவம் ஒரு 'முட்டாள்தனமான அறிவியல்'-பாபா ராம்தேவ்.
  • கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை சரியானது அல்ல-பாபா ராம்தேவ்.
  • இந்திய மருத்துவ சங்கம் பாபா ராம்தேவ் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ளது.
அவங்க அப்பாவால் கூட என்னை கைது செய்ய முடியாது: பாபா ராம்தேவ் வீடியோவால் பரபரப்பு title=

யோகா குரு ராம்தேவ் இந்தியாவின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர். அவரது யோகாசனங்களாலும், இயற்கையோடு ஒன்றிணைந்துள்ள மருந்துகளாலும் பலர் நன்மை அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் அவரை பின்தொடர்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். 

சமீபத்தில் பாபா ராம்தேவ் (Baba Ramdev) அலோபதி மருத்துவர்கள் மற்றும் அலோபதி மருத்துவம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக, அலோபதி மருத்துவம் ஒரு 'முட்டாள்தனமான அறிவியல்' என்றும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் பாபா ராம்தேவ் கூறினார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல மருத்துவர்களும் அறிவியல் நிபுணர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பல கோடி மகக்ளின் உயிர்களைக் காக்கும் மருத்துவ தொழிலைப் பற்றி பாபா ராம்தேவ் கூறியுள்ள தகாத கருத்துகளை அவர் திரும்பப் பெற வேண்டும் என அனைவரும் கூறினர். 

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனின் (Harsh Vardhan) அறிவுறுத்தலின் பேரில் பாபா ராம்தேவ் தனது கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டார்.  இந்த நிலையில் பாபா ராம்தேவ் மீண்டும் மருத்துவ துறையை தாக்கி பேசியுள்ளார். 

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில், பாபா ராம்தே, "தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களைப் போட்டுக்கொண்ட பிறகும் சுமார் ஆயிரம் மருத்துவர்கள் இறந்துள்ளனர். தங்களையே காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்களெல்லாம் எப்படிப்பட்ட மருத்துவர்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

கொரோனா (Coronavirus) சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை சரியானது அல்ல என்றும், இந்த முறையை ஒதுக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்துள்ளார். 

ALSO READ: Moderna-வின் ஒற்றை டோஸ் தடுப்பூசி: இந்தியாவில் கூடிய விரைவில் கிடைக்கும் 5 கோடி டோஸ்கள்

பாபா ராம்தேவ் மருத்துவத் துறையைப் பற்றி வெளிப்படுத்தியுள்ள கீழ்த்தரமான கருத்துகளால் கோபமடைந்த  இந்திய மருத்துவ சங்கம், அவர் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும், அப்படி செய்யவில்லை என்றால், ரூ. 1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இது மட்டுமல்லாமல், பாபா ராம்தேவ் மீது தேச விரோத குற்றச்சாட்டின் பேரில் உடனடியாக வழக்கு தொடரப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவ கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில், தற்போது பாபா ராம்தேவின் மற்றொரு வீடியோ சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. அந்த வீடியோவில் பாபா ராம்தே, "அவங்க அப்பனால் கூட என்னைக் கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்" என்று கூறுவதைக் காண முடிகிறது. 

இதைத் தொடர்ந்து பலர் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் காரசாரமான கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

ALSO READ: பதஞ்சலியின் Coronil: WHO திட்டத்தின் கீழ் சான்றிதழ் அளித்தது ஆயுஷ் அமைச்சகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News