வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கினார் நிவின் பாலி!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, நடிகர் நிவின் பாலி ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2018, 05:23 PM IST
வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கினார் நிவின் பாலி! title=

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, நடிகர் நிவின் பாலி ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்!

கேரளாவில் கொட்டடித்தீர்த்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை 322 பேர் பலியாகியுள்ளனர், 1093 நிவாரண முகாம்களில் இதுவரை 342699 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாத்தினை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ.8 லட்சம், உயிர் இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

மேலும், சேதத்தில் இருந்து மீள நிதியுதவி அளிக்கும்படியும் உலக மக்களிடன் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் உலக நாடுகள் உள்படப் பல்வேறு இடங்களில் இருந்தும் கேரளாவுக்கு உதவிக்கரங்கள் நீண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் நிவின் பாலி ரூ.25 லட்சம் கேரள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்!

Trending News