2019 பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ஆவத்தில் எனக்கு ஆர்வமும் இல்லை: நிதின் கட்கரி

2019 பொதுத்தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2018, 08:57 AM IST
2019 பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ஆவத்தில் எனக்கு ஆர்வமும் இல்லை: நிதின் கட்கரி title=

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியுள்ளதால், பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் என விவசாய மேம்பாட்டு குழுவான வி.என்.எஸ்.எஸ்.எம் தலைவராக இருக்கும் கிஷோர் திவாரி ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் சர்வாதிகார மனப்பான்மையுடன் காணப்படும் தலைவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருப்பது நாட்டிற்கு ஆபத்தானதாகும். இதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளது. பாஜகவின் தலைமை தற்போது ஜனநாயகத்திலிருந்து விலகிவிட்டது. பி.ஜே.பி மீது மக்களுக்கு நிறைய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் தேர்தல்களில் எதிரொலித்து. வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்றால் பிரதமர் வேட்பாளரை மாற்ற வேண்டியது மிக அவசியம். இதற்கு நிதின் கட்காரி பொருத்தமானவர். வரும் ஆண்டு 2019-ல் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் என கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த கடிதச்சம்பவம் பாஜக மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இதுக்குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நரேந்திர மோடியை மாற்றும் எண்ணம் இல்லை என்றும், அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நிதின் கட்காரி ANI செய்தி நிறுவனத்து பேட்டியளித்தார். அப்பொழுது அவர், "நான் தற்போது உள்ள நிலையில்(பதவி) சந்தோஷமாக இருக்கிறேன் என்றார். இப்போது கங்கை நதி தொடர்பான பல வேலைகளை முடிக்க வேண்டி உள்ளது. பல எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் கட்டப்பட வேண்டும். இந்த சாலைகள் மூலம் 13-14 நாடுகளை இந்தியாவுடன் இணைக்கப்படும். இதற்க்காக முடிக்க வேண்டிய பல பணிகளும் உள்ளன. அவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். எனவே நான் தற்போது இருக்கும் பதவியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்"

பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது. தனியாக நின்று தோற்கடிக்க முடியாது என ஒரு அரசியல் கட்சி உணர்ந்தால், அவர்கள் மெகா கூட்டணியை தயார் செய்கிறார்கள். இந்த மெகா கூட்டணி என்பது பயம் மற்றும் கட்டாயத்தினால் உருவாக்கப்பட்டு உள்ளது. மோடி ஜி மற்றும் பிஜேபியை பார்த்து பயப்படுவதினால் தான், இப்போது ஒருவருக்கொருவர் பேசாத கட்சிகள் எல்லாம் கூட ஒன்றாக இணைய விரும்புகின்றனர் என மெகா கூட்டணி குறித்து கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி என பார்க்கவில்லை. ஏனென்றால் தொகுதிகளின் வெற்றியை பொறுத்தவரை பி.ஜே.பிக்கும் காங்கிரசிற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. மூன்று மாநிலகளில் ஏற்ப்பட்ட நிலைமையை கருத்தில் கொண்டு, குறைகளை அறிந்து அடுத்த வரும் மக்களவை தேர்தலில் நாங்கள் வேலை செய்வோம். 2019 ஆம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி பெறுவோம். மீண்டும் மோடியை பிரதமராக அமரவைப்போம்.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் முந்தைய அரசு எந்தவொரு திட்டத்தையும் சரியாக செய்யவில்லை என நிதின் கட்காரி குற்றம் சாட்டினார். முந்தைய அரசாங்கங்கள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை புறக்கணித்துள்ளது. ஆனால் பாஜக தலைமையிலான அரசு அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.4000 கோடி மதிப்பிலான திட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்காக 400 கி.மீ. தூரத்திற்கு சாலை கட்டப்பட வேண்டும். அருணாச்சல பிரதேசம் ஒரு பெரிய பகுதி என்றாலும், அதன் மக்கள்தொகை குறைவாக இருக்கிறது. இந்த மாநிலம் சர்வதேச எல்லையுடன் இணைந்துள்ளது. இங்கு சாலைகள் இல்லாததால் தான் வறுமை மற்றும் வேலையின்மை ஏற்ப்பட்டு உள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாலைகள் போட்டதும், அங்கு வேலைவாய்ப்பு உருவாகும். வறுமை ஒழியும். இவ்வாறு அவர் கூறினார்

Trending News