ஒரே நாளில் சாதனை அளவாக 70,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்: சுகாதார அமைச்சகம்!!

மே மாதத்தில் 50,000 ஆக இருந்த இந்த மீட்பு எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 30 லட்சத்துக்கு மேலுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த என்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2020, 01:25 PM IST
  • செப்டம்பர் 5 ஆம் தேதி, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவாக, 70,072 ஆக பதிவாகியுள்ளது.
  • சனிக்கிழமையன்று, மிக அதிக அளவாக, ஒரே நாளில் 86,432 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
  • பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளார்கள்.
ஒரே நாளில் சாதனை அளவாக 70,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்: சுகாதார அமைச்சகம்!! title=

புது தில்லி: COVID19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கையில் ஒரு அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் 50,000 ஆக இருந்த இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 30 லட்சத்துக்கு மேலுள்ளது.

குணமடைந்தவர்களின் மொத்த என்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சமீபத்திய தகவல்களின் படி இதன் துல்லியமான எண்ணிக்கை 31,07,223 ஆகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 70,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸின் மீட்பு விகிதம் (Recovery Rate) நல்ல முன்னேற்றத்தைக் கண்டு சாதனை படைத்ததாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

"செப்டம்பர் 5 ஆம் தேதி, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவாக, 70,072 ஆக பதிவாகியுள்ளது. தற்போது, ​​மீட்பு விகிதம் 77.23 சதவீதமாக உள்ளது. இதனால் இறப்பு விகிதமும் (CFR) குறைந்து வருகிறது. இது தற்போது 1.73 சதவிகிதமாக உள்ளது." என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் ஒரு வரைபடத்தின்படி, செப்டம்பர் 3 ஆம் தேதி 68,584 பேரும், செப்டம்பர் 1 ஆம் தேதி 65,081 பேரும் ஆகஸ்ட் 24 அன்று 57,469 பேரும் குணமடைந்தனர்.

ALSO READ: இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 90,632 பேருக்கு கொரோனா தொற்று..!

"மொத்த மீட்டெடுப்புகளில் 60 சதவீததம் ஐந்து மாநிலங்களில் ஏற்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 21 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதன்பின்னர் தமிழகத்தில் 12.63 சதவீதம், ஆந்திராவில் 11.91 சதவீதம், கர்நாடகாவில் 8.82 சதவீதம், உத்திர பிரதேசத்தில் 6.14 சதவீதம் என நோயாளிகளின் மீட்பு விகிதம் உள்ளது” என்று அமைச்சகம் கூறியுள்ளது.

846,395 பேர் சிகிச்சையில் உள்ளார்கள் என்றும் 22.6 லட்சம் பேருக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்தது. இதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கைக்கும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகித வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

"கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21.04 சதவிகிதமாகும். பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளார்கள்” என்று அமைச்சக அறிக்கை கூறியுள்ளது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, சனிக்கிழமையன்று, மிக அதிக அளவாக, ஒரே நாளில் 86,432 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் 1,089 இறப்புகளுடன், ஒட்டுமொத்த எண்ணிக்கை 69,561 ஐ எட்டியுள்ளது.

8,46,395 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 31,07,223 குணப்படுத்தப்பட்டு வீடி திரும்பியுள்ளதோடு, இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,23,179 ஆக உள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ALSO READ: கொரோனா காலத்திலும் அயராது உழைத்து சாதனை படைத்த அமைச்சகம் எது தெரியுமா?

Trending News