மீண்டும் தலைதூக்கும் குரங்கம்மை பாதிப்பு! டெல்லியில் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் தொற்று

New Case Of Monkeypox: டெல்லியில் மற்றொரு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நைஜீரிய பெண் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2022, 09:11 PM IST
  • டெல்லியில் மீண்டும் ஒரு குரங்கம்மை பாதிப்பு
  • பாதிக்கப்பட்டவர் மருத்துமனையில் சிகிச்சை பெறுகிறார்
  • மேலும் ஒருவருக்கு குரங்கம்மை இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
மீண்டும் தலைதூக்கும் குரங்கம்மை பாதிப்பு! டெல்லியில் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் தொற்று title=

நியூடெல்லி: டெல்லியில் மற்றொரு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நைஜீரிய பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தலைநகர் டெல்லியில் புதிதாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சிகளை அதிகரித்துள்ளது. கிடைத்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட நைஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் குரங்கு காய்ச்சலின் 13வது வழக்கு இதுவாகும். இதனை அடுத்து, இப்போது டெல்லி நகரில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கிடைத்த தகவலின்படி, அந்த பெண் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவர் டெல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்

உலகில் 103 நாடுகளில் குரங்கு நோய் பரவியுள்ளது
குரங்கு பாக்ஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் நோயாகும் என்றும், இதுவரை இந்தியாவில் மொத்தம் 13 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஜனவரி 1, 2022 முதல் இப்போது வரை (செப்டம்பர் 14, 2022), உலகெங்கிலும் மொத்தம் 103 நாடுகளில் குரங்கம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை. மொத்தம் 59,147 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | மனிதனிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை நோய்

குரங்கு காய்ச்சலின் புதிய வகை கண்டுபிடிப்பு  
சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டனில் குரங்கு காய்ச்சலின் புதிய வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு குறித்து செய்தி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மரபணு வரிசைமுறையின் உதவியுடன், ஒரு நபருக்கு ஒரு புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு வந்திருந்தார், மேலும் நோய்த்தொற்றின் அறிகுறிகளள் தெரிந்தபின்னர், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன, அதில் அவர் புதிய திரிபால்பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. குரங்கு பாக்ஸ் வைரஸின் புதிய வகைக்கு விஞ்ஞானிகள் A. 2 strain என்று பெயரிட்டுள்ளனர்.

குரங்கு அம்மை நோய், ஒருவருடான நெருங்கிய தொடர்பினால் பரவலாம் என்றும், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய ஆடை, படுக்கை அல்லது பாதிக்கப்பட்டவரின் பொருட்கள், மேற்பரப்புகள் அல்லது துணிகளை யாராவது தொடும்போதும் பரவலாம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க | கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News