IC 814 The Kandahar Hijack Controversy: 1999ஆம் ஆண்டு நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இந்திய விமானம் ஒன்று கடத்தப்பட்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட IC-814: காந்தஹார் கடத்தல் (IC 814: The Kandahar Hijack) என்ற வெப்-சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஆக.29ஆம் தேதி வெளியானது. இந்த வெப் சீரிஸ்தான் பாஜகவினர் மத்தியிலும், வலதுசாரிகள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
1999ஆம் ஆண்டு ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்ற பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பினர், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் IC-814 விமானத்தை கடத்தினர். இவர்கள் நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இருந்து டெல்லிக்கு வர இருந்த அந்த விமானத்தை நேபாளத்திலேயே கடத்திய பயங்கரவாதிகள் அதனை ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காந்தஹர் விமான நிலையத்தில் தரையிறக்கினர்.
பயங்கரவாதிகள் விடுதலை
அந்த விமானத்தில் இருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டுமென்றால், இந்திய அரசால் பிடிக்கப்பட்டு சிறையில் இருந்த மசூத் ஆசாத், அகமது ஓமர் சயீத் சேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசிடம் பேரம் பேசியது.
மேலும் படிக்க | இந்தியாவில் விரைவில் தடை செய்யப்படும் IC 814 வெப் சீரிஸ்? ஏன் தெரியுமா?
புத்தகம் டூ வெப்-சீரிஸ்
முதலில், இந்திய பாதுகாப்பு படையினர் அதிரடி ஆப்ரேஷனில் இறங்கி பயங்கரவாதிகளிடம் சிக்கிய பயணிகளை மீட்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த அதிரடி ஆப்ரேஷன்களுக்கு ஆப்கன் அரசு அப்போது அனுமதி தராததாலும், உலகளவில் அப்போதைக்கு இந்தியாவுக்கு உறுதுணையாக பெரிய நாடுகள் நிற்கவில்லை என்பதாலும் அவர் கேட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க இந்திய அரசு முடிவெடுத்தது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கடத்தப்பட்டபோது விமானத்தின் விமானியாக இருந்த தேவி ஷரண் என்பவர் 'Flight Into Fear: The Captain's Story' எழுதிய புத்தகத்தை தழுவி இந்த வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
ஐந்தும் புனைப் பெயர்கள்
IC-814 விமானத்தை இப்ராஹிம் அதார், ஷாகித் அக்தர் சயீத், சன்னி அகமது குவாசி, மிஸ்திரி ஜாஹூர் இப்ராஹிம் மற்றும் ஷகிர் ஆகிய ஐந்து பேர்தான் கடத்தியதாக 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த 5 பேரும் விமானத்தை கடத்திய பின்னர், தங்களுக்குள்ளான தகவல் தொடர்புக்கு 5 புனை பெயர்களை பயன்படுத்தி உள்ளனர்.
Chief, Doctor, Burger, Bhola, Shankar ஆகிய 5 புனை பெயர்களை அவர்கள் பயன்படுத்தி உள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தை பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரும், விமானத்தை கடத்தியபோது பயங்கரவாதிகள் தங்களை இந்த பேரிலேயே அழைத்துக்கொண்டதாக பயணிகள் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். இதே பெயர்கள்தான் வெப்-சீரிஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிளம்பிய சர்ச்சை
இருப்பினும், பயங்கரவாதிகளின் பெயர் இந்தியர்களுடன் தொடர்படுத்தியிருப்பதாக வெப்-சீரிஸில் காட்டுவதன் மூலம் வருங்கால தலைமுறையினருக்கு தவறான புரிதல் ஏற்படும் என பாஜகவின் தேசிய தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் அமித் மால்வியா அவரது X பக்கத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து, சமூக வலைதள பயனர்கள் பலரும் வெப்-சீரிஸில் இப்படி இந்தியர்களை தொடர்புபடுத்தி பெயர் சூட்டுவது, இந்தியர்களின் மனங்களை புண்படுத்துவிதமாக இருக்கிறது என புகார்களை எழுப்பினர்.
The hijackers of IC-814 were dreaded terrorists, who acquired aliases to hide their Muslim identities. Filmmaker Anubhav Sinha, legitimised their criminal intent, by furthering their non-Muslim names.
Result?
Decades later, people will think Hindus hijacked IC-814.
Left’s…
— Amit Malviya (@amitmalviya) September 1, 2024
சம்மனும், விளக்கமும்...
அந்த வகையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகம், நெட்பிளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் மோனிகா ஷெர்கிலுக்கு நேற்று சம்மன் அளித்தது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் இந்தியா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Mumbai, Maharashtra | Netflix India issues an official statement addressing the controversy around its original, IC814- The Kandahar Attack- "... For the benefit of audiences unfamiliar with the 1999 hijacking of the Indian Airlines flight 814, the opening disclaimer has… pic.twitter.com/KpfFuWJXtB
— ANI (@ANI) September 3, 2024
1999 விமான கடத்தில் குறித்து அறியாத பார்வையாளர்களின் நலன் கருதி, தொடரின் ஆரம்பத்தில் வரும் எச்சரிக்கை அறிவிப்பில், சம்பவத்தின் போது பயங்கரவாதிகளின் பயன்படுத்திய புனை பெயர்களே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என அப்டேட் செய்யப்படும்" என தெரிவித்துள்ளது. மேலும், உண்மை சம்பவங்களை பிழையின்றி ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் உறுதிப்பூண்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொல்கத்தா பெண் கொலையான நேரத்தில்... கல்லூரி முதல்வராக இருந்தவர் கைது - பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ