Netaji Birth Anniversary: ‘பராக்ரம் திவஸ்’ கொண்டாட்டங்களில் கலந்துகொள்கிறார் PM Modi

நேதாஜியைப் போல, நாட்டும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தைரியத்துடனும் அச்சமின்றியும் செயல்பட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2021, 09:55 AM IST
  • இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாள் நாடு முழுதும் கொண்டாடப்படுகின்றது.
  • நேதாஜியின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை பிரதமர் கொல்கத்தாவில் துவக்கி வைப்பார்.
  • நேதாஜியின் பிறந்தநாள் ‘பராக்ரம் திவஸாக’ கொண்டாடப்படும்.
Netaji Birth Anniversary: ‘பராக்ரம் திவஸ்’ கொண்டாட்டங்களில் கலந்துகொள்கிறார் PM Modi title=

புதுடெல்லி: சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 'பராக்ரம் திவஸ்' கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 23, 2021) கொல்கத்தாவில் துவக்கி வைப்பார்.

ட்விட்டரில் இது குறித்து எழுதிய பிரதமர் மோடி, “மேற்கு வங்காளத்தின் அன்புள்ள சகோதர சகோதரிகளே, உங்கள் மத்தியில், அதுவும் பராக்ரம் திவஸின் புனித நாளில், இங்கு இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். கொல்கத்தாவில் நிகழ்ச்சிகளின் போது, ​​துணிச்சலின் எடுத்துக்காட்டான நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்" என்றார்.

பிரதமர் மோடி (PM Modi) சனிக்கிழமை எல்ஜின் சாலையில் உள்ள நேதாஜி பவனுக்கு செல்வார். விக்டோரியா மெமோரியலில் நடைபெறும் `பராக்ரம் திவஸ்’ கொண்டாட்டங்களின் தொடக்க விழாவிற்கு அவர் தலைமை தாங்குவார்.

பிரதம மந்திரி அலுவலகம் (PMO) வெளியீட்டின்படி, நேதாஜி குறித்த ஒரு கண்காட்சி மற்றும் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் ஷோ ஆகியவை இந்நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்படும்.

"இந்த நிகழ்வில் ஒரு நினைவு நாணயமும் தபால்தலையும் வெளியிடப்படும். நேதாஜியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ‘அம்ரா நியூட்டன் ஜூபோனேரி டூட்’ என்ற கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெறும்" என்று பி.எம்.ஓ கூறியுள்ளது.

ALSO READ: நேதாஜி Subhas Chandra Bose-க்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும்: BJP MP கோரிக்கை

விழாவில், நேதாஜியின் சுபாஷ் சந்திரபோசின் (Subhas Chandra Bose) கடிதங்களை அடிப்படையாகக் கொண்ட “புத்தகம்: நேதாஜியின் கடிதங்கள் (1926-1936)" என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்படும். INA வீரர்கள் மற்றும் பிற சுதந்திர போராளிகளை கௌரவிக்கும் வகையில் ஒரு பாராட்டு விழாவும் நடைபெறும்.

"இந்த நிகழ்வுக்கு முன்னர், பிரதமர் தேசிய நூலகத்தை பார்வையிடுவார். '21 ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷின் கொள்கைகளை மீண்டும் சென்று பார்வையிடல்’ என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாட்டுக்கும் ஒரு கலைஞர்கள் முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் கலைஞர்களுடனும் மாநாட்டில் பங்கு கொள்ளும் உறுப்பினர்களுடனும் உரையாடுவார்" என்று பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு கூறியுள்ளது.

நேதாஜியின் பிறந்த நாள் (ஜனவரி 23) ஒவ்வொரு ஆண்டும் 'பராக்ரம் திவஸ்' என்று கொண்டாடப்படும் என்று நரேந்திர மோடி (Narendra Modi) அரசு 19 ஜனவரி 2021 அன்று அறிவித்தது. தன்னலமற்ற சுதந்திரப் போராளியான சுபாஷ் சந்திர போசை கௌரவிப்பதற்கும் நினைவுகூருவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை 'பராக்ரம் திவஸ்' ஆக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. நேதாஜியைப் போல, நாட்டும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தைரியத்துடனும் அச்சமின்றியும் செயல்பட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படும்.  உறுதியோடு துன்பங்களை எதிர்கொள்ளவும், தேசபக்திக்கான உற்சாகத்தை வளர்த்துக்கொள்ளவும் இன்றும் நேதாஜி ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறார்.

நேதாஜி மேற்கு வங்காள (West Bengal) மக்களிடையே ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் போசின் பெயரில் மக்களை தங்கள் பக்கம் திருப்ப அங்கு ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களால் ஆன அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன.

ALSO READ: நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News