நாசா வெளியிட்டுள்ள இந்'தீ'யாவின் அதிர்ச்சி புகைப்படம்!

வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய பற்றிய அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா...!

Last Updated : Apr 30, 2018, 05:53 PM IST
நாசா வெளியிட்டுள்ள இந்'தீ'யாவின் அதிர்ச்சி புகைப்படம்! title=

இந்தியாவில் கடந்த 10 நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக இயற்கை பேரிடர் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி மையமான நாசா, இந்தியாவை சேட்டிலைட் மூலம் படம் படித்து பலமுறை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது கடந்த 10 நாள் இந்தியாவின் நிலை எப்படி இருக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. 

இந்த புகைப்படத்துடன் நாசா இந்தியாவிற்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. வெளியிட்டுள்ள நாசா, எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் தீப்பற்றி எறிவது போன்று சிவப்பு நிற புள்ளிகளாக காட்சியளிக்கிறது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, சட்டீஸ்கர் மற்றும் சில தென்னிந்திய பகுதிகளில் இந்த சிவப்பு நிறம் அதிகமாக தெரிகிறது.  

இந்த தீ புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங்கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டை குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ புள்ளிகள் அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயை குறிப்பதாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதையடுத்து, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, ஏற்படும் இந்த காட்டுத்தீயால் வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததாலும், விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகளே விளை நிலத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் அதிகம் நடந்ததாலும் இந்த தீ புள்ளிகள் அதிகமாக காணப்படுவதாலும் இப்படி நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News