டோக்கியா: மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் நேற்று கையொப்பமிட்டன.
இந்நிலையில் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரடமர் மோடி புகழ்பெற்ற ஷின்கான்சன் புல்லெட் ரயிலில் இன்று பயணித்தார். கோபோ நகருக்கு இருவரும் புல்லெட் ரயில் மூலமாக சென்றனர்.
மும்பை-அகமதாபாத் இடையே செல்லும் அதிவேக விரைவு ரெயில் சேவைக்கான வழித்தடம் அமைக்கும் பணியை வரும் 2018-ம் ஆண்டில் தொடங்கி 2023-ம் ஆண்டில் இந்தப் பாதையில் ரெயில்களை இயக்க ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.
On the way to Kobe with PM @AbeShinzo. We are on board the Shinkansen bullet train. pic.twitter.com/9W1WG4hXCQ
— Narendra Modi (@narendramodi) November 12, 2016