மத்தியபிரதேசம் ரேவாவில் சிறப்பு ஆயுதப்படை (எஸ்.ஏ.எஃப்) 9 வது பட்டாலியனில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட ஒரு கான்ஸ்டபிள், ஆறு நாட்கள் விடுப்பு கோருவதற்கு இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். அந்த விடுப்பு கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் முதல் காரணம் என்னவென்றால் அவரது தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவரை பார்த்து கொள்ள வேண்டும் என்பது. மற்றொரு காரணம் என்னவென்றால் ஐயா, நான் உங்களுக்கு கீழ் உள்ள வாகன கிளையில் வேளை செய்கிறேன். என் அம்மாவுக்கு கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லை. மேலும், நான் வீட்டில் ஒரு எருமை வைத்திருக்கிறேன், அது எனக்கு மிகவும் பிடித்தது.
READ | வைரல் வீடியோ: மனித குழந்தையை பெற்றெடுத்த எருமை?
READ | WATCH: தான் வினை தன்னை சுடும் என்பதை தெளிவாக நிரூபித்த வீடியோ...
இந்த எருமை சமீபத்தில் ஒரு கன்றுக்குட்டியை பிரசவித்தது, அவற்றை கவனித்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லை. நான் இந்த பதவிக்கு வர எனது எருமையும் ஒரு காரணம். ஏனென்றால் என் வீட்டு எருமையின் பாலை குடித்து தான் நான் போலீஸ் வேலையில் சேர தகுதி பெற்றேன். அதனால் எருமைக்கு என் உதவி தேவைப்படும் நேரத்தில் நான் அவளை கவனிக்க வேண்டும். தயவுசெய்து எனக்கு ஆறு நாட்கள் விடுப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இதனால் நான் என் அம்மாவுக்கு சிகிச்சையளிக்க முடியும். மேலும் என் எருமையையும் கவனிக்க முடியும் என்று அவரது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இப்பிழையில் தற்போது இந்த போலீஸ் கான்ஸ்டபிள் எழித்தியுள்ள விடுப்பு விண்ணப்பம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.