ராமர் கோவில் பூமி பூஜைக்கு கவுசல்யா பிறந்த ஊர் மண் எடுத்து செல்லும் முஸ்லிம் பக்தர்

மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த சான்றாக, ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொள்ள, ஒரு முஸ்லிம் பக்தர் 800 கிமீ தூரத்திற்கு கால் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 27, 2020, 05:54 PM IST
  • சத்திஸ்கர் மாநிலத்தின் சந்த்குரி கிராமம் ராமரின் தாய் கவுசல்யாவின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது.
  • இந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் பூ பூஜையில் கலந்து கொள்ள 800 கிமீ காலநடையாக பயணம் மேற்கொள்கிறார்
  • ஆகஸ்ட் 5 ஆம் தேதி பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார்
ராமர் கோவில் பூமி பூஜைக்கு கவுசல்யா பிறந்த ஊர் மண் எடுத்து செல்லும் முஸ்லிம் பக்தர் title=

மதம் கடந்த பக்தியின் அடையாளமாக, ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொள்ளும் இந்த முஸ்லிம் பக்தர், சத்திஸ்கர் மாநிலத்தின் சந்த்குரி கிராமமத்தை சேர்ந்தவர். இந்த சந்த்கூரி கிராமம் ராமரின் தாய் கவுசல்யாவின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் முகமது பைஸ் கான் பகவான் ராமரின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்த்குரி: அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலுக்கான ‘பூமி பூஜை’  நடைபெற சில நாட்களுக்கு முன்னதாக, சத்தீஸ்கரின் சந்த்குரியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் நபர். 800 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று இந்த பூமி பூஜையில் கலந்து கொள்ள  முடிவு செய்துள்ளார்.

ALSO READ | 500 ஆண்டில் வாய்த்த முகூர்த்தம்.. நாட்டின் பெருமையை அயோத்யா பறைசாற்றும் : CM Yogi

தற்போது, மத்திய பிரதேசத்தின் அனுப்பூரை அடைந்த முகமது பைஸ் கான், ANI இடம், “நான் மதத்தினால் ஒரு முஸ்லீம், ஆனால் நான் ராமரின் பக்தன். நம் முன்னோர்களைப் பற்றி நாம் ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் இந்துக்கள். அவர்களின் பெயர்கள் ராம்லால் அல்லது ஷியாம்லால் என இருக்கலாம். நாம் அனைவரும் தேவாலயத்திற்குச் சென்றாலும் மசூதிக்குச் சென்றாலும் நாம் அனைவருக்கும் இந்து வம்சாவளி வந்தவர்கள் தான். ”

“எங்கள் மூதாதையர் ராமர். அல்லாமா இக்பால் என்ற பாகிஸ்தானின் தேசிய கவிஞர் இதை விளக்க முயன்றார், அவர் சரியான பார்வையை கொண்டவர்,. ராமரை இந்தியாவின்  கடவுளாக கருத வேண்டும் என்று கூறினார். இந்த பயபக்தியுடன், சந்த்குரி என்னும் கவுசல்யாவின் பிறந்த இடத்திலிருந்து அயோத்திக்கு மண்ணை எடுத்துச் செல்கிறேன், அதை பூமி பூஜையின் போது அர்பணிப்பேன், ”என்று அவர் கூறினார்.

அவரது முன்முயற்சியை விமர்சிக்கும் நபர்களைப் பற்றி கேட்டபோது, ​​"பாகிஸ்தானில் சிலர் இந்து மற்றும் முஸ்லீம் பெயர்களுடன் போலி ஐடிகளை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் தவறான செய்திகளை பரப்பி, இரு தரப்பினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்துகின்றனர்" என்று அவர் கூறினார்.

அவர் பல்வேறு கோயில்களுக்கு 15,000 கி.மீ தூரம் நடந்து சென்றதாகவும், அங்கே சிறிது நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறினார்.

ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!

“நான் கோவில்களுக்கு கால்நடையாக செல்வது இது முதல் முறை அல்ல. நான் 15,000 கி.மீ தூரம் நடந்து கோயில்களிலும் மடங்களிலும் தங்கியிருக்கிறேன். எனக்கு எதிராக யாரும் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ராம் கோயில் கட்டுமானத்தின் போது இந்தியாவில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை உருவாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது, ”என்று கான் கூறினார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார், மேலும் அவருடன் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல் கே அத்வானி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News