26/11 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அமீர் கசாப், தன்னை "இந்து"வாக காட்டிக்கொள்ள முயற்சி

26/11 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் அமீர் கசாப், தன்னை "இந்து" ஆக நிரூபிக்க முயன்றதாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 19, 2020, 11:43 AM IST
26/11 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அமீர் கசாப், தன்னை "இந்து"வாக காட்டிக்கொள்ள முயற்சி title=

மும்பை: உலகம் முழுவதையும் உலுக்கிய 26/11 மும்பை தாக்குதல்கள் (26/11 Mumbai terror attacks) குறித்து மிகப்பெரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அஜ்மல் அமீர் கசாப் (Ajmal Kasab) தொடர்பானது. மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா "லெட் மீ சே இட் நவ்" (Let Me Say It Now) என்ற தனது புத்தகத்தில் மும்பை தாக்குதல் குறித்து விவரங்களை எழுதியுள்ளார். அதில் மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளும் தாங்கள் இந்துக்கள் என்பதை நிரூபிக்க முயற்சி செய்ததாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது, ​​கசாப் என்பவன் "சமீர் தினேஷ் சவுத்ரி" (Samir Dinesh Chaudhari) என்று தவறான அடையாள அட்டையுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். மேலும் தாக்குதலின் போது அவர்கள் மணிக்கட்டில் ஒரு சிவப்பு நூலைக் கட்டயிருக்க வேண்டும் என்பது லஷ்கர்-இ-தைபா (Lashkar-e-Taiba) திட்டமாகும்.

லஷ்கர்-இ-தைபா (எல்.ஈ.டி) தனது திட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால், ‘சமீர் தினேஷ் சவுத்ரி’ என்ற அடையாளத்துடன் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இறந்திருப்பார் என்று மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 

மேலும் 26/11 தாக்குதலை இந்து பயங்கரவாத செயலாக முன்வைக்க பயங்கரவாத அமைப்பு விரும்பியதாக மரியா தனது புத்தகத்தில் வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். சமிர் தினேஷ் சவுத்ரி என்ற பெயரில் பெங்களூரில் வசிப்பவராக அஜ்மல் கசாப்பை திட்டமிட்டதாக கூறப்பட்டுள்ளது. 

உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப்பைக் கொல்லும் பொறுப்பு தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு வழங்கப்பட்டதாகவும் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். 

2008 இல் நடந்த 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட கசாப் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News