மும்பை: மும்பை தடார் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்!
பலியான பெண்மனியின் பெயர் கெட்டி கவாண்டே என கண்டறியப்பட்டுள்ளது. 28 வயதாகும் இவர் கடந்த சில தினங்களாக மன நலம் குறைவிற்காக சிகிச்சை பெற்று வந்தார் என தெரிகிறது.
இந்நிலையில் இவர் இன்று மாலை 6.30 மணியளவில், மும்பை பிரபாதேவி பகுதியில் அடுக்குமாடி குடியிறுப்பு ஒன்றின் 23-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச்சென்றனர், எனினும் கொண்டுச்செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலியான கவாண்டே 2 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் முடித்தார் எனவும், இவர் உளவியல் பிரிவில் முதுகலை முடித்துள்ளார் எனவும் காவல்துறையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது!