நாட்டின் “மலிவான” diagnostic வசதி டிசம்பரில் குருத்வாரா பங்களா சாஹிப்பில் செயல்படத் தொடங்கும், இங்குள்ள MRIக்கு வெறும் ரூ .50 செலவாகும் என்று டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (DSGMC) தெரிவித்துள்ளது.
குருத்வாரா வளாகத்தில் உள்ள குரு ஹர்க்ரிஷன் மருத்துவமனையிலும் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் செயல்படத் தொடங்கும். டயாலிசிஸ் நடைமுறைக்கு ரூ .600 மட்டுமே செலவாகும் என்று டி.எஸ்.ஜி.எம்.சி தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.
ALSO READ | 28 ஆண்டுக்கு பின் கண்ணிலிருந்து நீக்கப்பட்ட காண்டாக்ட் லென்ஸ்....
ரூ .6 கோடி மதிப்புள்ள Diagnostic இயந்திரங்கள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. டயாலிசிஸுக்கு நான்கு இயந்திரங்களும், அல்ட்ராசவுண்ட், எக்ஸ்-ரே மற்றும் எம்.ஆர்.ஐ.க்கு தலா ஒரு இயந்திரமும் இதில் அடங்கும்.
தேவைப்படுபவர்களுக்கு வெறும் ரூ .50 க்கு காந்த அதிர்வு அலை வரைவு (எம்ஆர்ஐ) சேவைகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு, எம்ஆர்ஐ ஸ்கேன் ரூ .800 செலவாகும். யாருக்கு சலுகை தேவை என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று சிர்சா கூறினார்.
தனியார் ஆய்வகங்களில், ஒரு எம்ஆர்ஐக்கு குறைந்தபட்சம் ரூ .2,500 செலவாகிறது. குறைந்த வருமானத்தைச் சேர்ந்தவர்கள் எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் வெறும் ரூ .150 க்கு பெற முடியும். இயந்திரங்கள் நிறுவப்பட்டு, diagnostic மையம் டிசம்பர் முதல் வாரத்தில் செயல்படும். இவை நாட்டில் மிகவும் மலிவான diagnostic சேவைகளாக இருக்கும் என்று சிர்சா கூறினார்.
ALSO READ | உஷார்... கொரோனாவை தொடர்ந்து மக்களிடையே பரவும் மற்றொரு வைரஸ்..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR