வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் பலத்த மழைக்கான வாய்ப்பு: IMD அறிக்கை

பருவமழை இமயமலை அடிவாரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூலை 11, 2020 அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2020, 03:50 PM IST
  • பருவமழை இமயமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்துள்ளது.
  • கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும்.
  • வட கிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் பரவலான மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் பலத்த மழைக்கான வாய்ப்பு: IMD அறிக்கை title=

புதுடெல்லி: பருவமழை இமயமலை அடிவாரத்தை (Himalayan Foothills) நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூலை 11, 2020 அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

IMD தனது ட்விட்டர் பக்கத்தில், ''பருவமழை (Monsoon) இமயமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்துள்ளது. கூடுதலாக, வங்காள விரிகுடாவிலிருந்து தென் மேற்கு / தென்கிழக்கு காற்று குறைந்த மட்டங்களில் இணைவது அடுத்த 2 நாட்களில் வட கிழக்கு (North East) மற்றும் கிழக்கு இந்தியாவில் (East India) தொடரும் எனத் தெரிகிறது. அதன் தாக்கத்தால், பரவலான மழை பெய்யக்கூடும். '' என்று கூறியுள்ளது.

 

ALSO READ: Monsoon diet: மழைக்காலத்தில் கீரை மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டுமா?

ஜூலை 13 முதல் பருவமழையின்  கிழக்கு பகுதி தெற்கு நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால், இந்தியாவின் மேற்கு, மத்திய மற்றும் வடக்கு சமவெளிகளில் ஜூலை 14 முதல் ஜூலை 16 பருவமழை புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என்றும் ஐ.எம்.டி மேலும் கணித்துள்ளது.

பருவமழையின் மாற்றம் காரணமாக கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும். “அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் கடுமையான இடியுடன் (Thunder) கூடிய பலத்த மழை (Heavy Rainfall) மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று IMD தெரிவித்துள்ளது.

ALSO READ: தலைநகரை கலக்கும் கபசுர குடிநீர்: சித்த மருத்துவத்துக்கு அதிகரிக்கும் மவுசு

Trending News