Rahul Gandhi Attack On PM Modi: காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி 6 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள புலம்பெயர் இந்தியர்களிடையே அவர் உரையாற்றிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளும் பாஜக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
'இது ஒரு நோய்'
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் தான் என்றும் கூறினார். ராகுல் காந்தி இந்த பேச்சிற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுது. இதற்கு கடுமையான மறுப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணங்களின் போது அவருக்கு கிடைத்த பாராட்டும், மரியாதையும் ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை" என்றார்.
மேலும் படிக்க | மேகதாது அணை எங்கள் உரிமை: டி.கே.சிவக்குமார்
முன்னதாக, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்த 'மொஹபத் கி துகான்' நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி,"எந்தவொரு மனிதனும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உலகம் மிகவும் பெரியது மற்றும் மிகவும் சிக்கலானது. எல்லாம் தனக்கு தெரியும் என நினைப்பது ஒரு நோய். இந்தியாவில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர் தான் மோடி!
அவர்கள் கடவுளுடன் உட்கார்ந்து, இங்கு என்ன நடக்கிறது என்பதை விளக்க முடியும் என நினைக்கிறார்கள். நிச்சயமாக, பிரதமர் மோடி அப்படிப்பட்டவர்களின் உதாரணம் தான். நீங்கள் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் கடவுளுக்கு விளக்குவார். தான் எதை உருவாக்கினேன் என்பதில் கடவுளே குழப்பமடைவார்" என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து ராகுல் காந்தி,"வரலாற்றாசிரியர்களுக்கு வரலாற்றையும், விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், ராணுவத்திற்கு போர் முறையையும் தங்களால் விளக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதன் மையமானது மிகவும் சாதாரணமானது. அவர்கள் கேட்கத் தயாராக இல்லை" என்றார்.
'பிரதமர் மோடிதான் பாஸ்...'
இந்த கருத்துக்கு ஆளும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்,"ராகுல் காந்தி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது, இந்தியாவை அவமதிக்கிறார், இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் பிரதமர் மோடியை அவமதிக்க விரும்புகிறார், ஆனால் இந்தியாவை அவமதித்து, இந்தியாவின் முன்னேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். வளர்ந்து வரும் நமது அந்தஸ்தை உலகமே அங்கீகரிக்கும் நேரத்தில் அவர் இந்தியாவை களங்கப்படுத்த முயற்சிக்கிறார்.
பிரதமர் மோடி சமீபத்தில் தனது வெளிநாட்டு பயணத்தின் போது உலகின் 24 பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளை சந்தித்து 50க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தினார். பல உலக தலைவர்கள் மோடி மிகவும் பிரபலமான தலைவர் என்று கூறுகிறார்கள். 'பிரதமர் மோடிதான் பாஸ்' என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியபோது, ராகுல் காந்தியால் இதனை ஜீரணிக்க முடியில்லை" என பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு வைத்த மல்யுத்த வீரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ