காதி காலண்டர்களில் காந்திக்கு பதிலாக மோடி படம்

காதி கிராம தொழிற்சாலை கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட காலண்டர் மற்றும் டைரியில், மகாத்மா காந்தி படத்திற்கு பதில், பிரதமர் மோடி படம் இடம் பெற்றுள்ளது.

Last Updated : Jan 13, 2017, 03:56 PM IST
காதி காலண்டர்களில் காந்திக்கு பதிலாக மோடி படம் title=

புதுடெல்லி: காதி கிராம தொழிற்சாலை கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட காலண்டர் மற்றும் டைரியில், மகாத்மா காந்தி படத்திற்கு பதில், பிரதமர் மோடி படம் இடம் பெற்றுள்ளது.

மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் கமி‌ஷனின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சமயத்தில் காலண்டர்கள் டைரிகள் வெளியிடப்பட்டு வருகிறது.

வழக்கமாக காதி கிராமத் தொழில் கமி‌ஷனின் காலண்டர்களில் மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெறும். இந்த ஆண்டு காலண்டர்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெறவில்லை.

அதற்கு பதில் பிரதமர் நரேந்திர மோடி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. 

இந்த கமிஷனர் அலுவலகம் வருடந்தோறும் காலண்டர் மற்றும் டைரி வெளியிடுவது வழக்கம். இந்த காலண்டரில், மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்றுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும். 

கடந்த 1920-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகாத்மா காந்தி நடத்திய சுதேசி போராட்டத்தை கவுரவிக்கும் வகையில் மகாத்மா படம் இடம்பெற்றிருக்கும். தற்போது, அந்த படத்திற்கு பதில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பாக காதி கிராம தொழில் கமிஷன் தலைவர் குமார் சக்சேனா கூறுகையில்:-

இது சாதாரணமான நடவடிக்கை தான். கடந்த காலங்களிலும் இதுபோல் இடம்பெற்றுள்ளது. காதி அமைப்பு காந்தியின் கொள்கைகள், திட்டங்கள் அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் உயிர்நாடியே மகாத்மாதான். 

எனவே, மகாத்மா காந்தியை புறக்கணிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. பிரதமர் மோடியும் கடந்த பல நாட்களாக காதி உடையை அணிகிறார். வெளிநாட்டினர் மத்தியில் இதனை பிரபலப்படுத்தியுள்ளதுடன், காதியின் தூதர்போன்று செயல்படுகிறார் எனக்கூறினார். 

Trending News