ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்டங்களில் மொபைல் போன் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, நிலைமையை இயல்பாக்குகின்றன.
அந்த வகையில் தற்போது, ஜம்மு பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களில் ‘டோடா, கிஷ்த்வாரா, ராம்பன், ராஜோரி, மற்றும் பஞ்ச்’ ஆகியவற்றில் மொபைல் போன் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் மொபைல் போன் சேவைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக புதன்கிழமை, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், குப்வாரா மற்றும் ஹண்ட்வாரா மாவட்டங்களில் மொபைல் போன் சேவைகளை அரசாங்கம் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார். மேலும், தொலைபேசிகளும் இணையமும் மக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், பெரும்பாலானவை பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்., "இது எங்களுக்கு எதிரான ஒரு வகையான ஆயுதம், எனவே நாங்கள் அதை நிறுத்திவிட்டோம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிப்படியாக, சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
"ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரிவு 370 நீக்கப்பட்டதிலிருந்து, பள்ளத்தாக்கில் பாதுகாப்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, இந்த கட்டுப்பாடுகள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பு வகையில் அகற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.