கைது செய்யப்பட்டபோது காதலியுடன் இருந்தாரா மெகுல் சோக்ஸி? தொடரும் மர்மம்

ஒவ்வொரு நாளும் மெகுஹுல் சோக்ஸி தொடர்பான பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மர்மமான முறையில் காணாமல் போனதிலிருந்தே அவரை தேடும் பணியில் இந்திய அதிகாரிகள் முழு முனைப்புடன் ஈடுபட்டிருந்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2021, 11:27 AM IST
  • வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பற்றிய மர்மம் தொடர்கதையாய் தொடர்கிறது.
  • கைது செய்யப்படபோது அவர் தன்னுடைய காதலியுடன் இருந்திருக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
  • அவர் இந்தியா வரும் நாளை இந்திய அதிகாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டபோது காதலியுடன் இருந்தாரா மெகுல் சோக்ஸி? தொடரும் மர்மம் title=

செயிண்ட் ஜான்ஸ்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு, இந்தியாவை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பற்றிய மர்மம் தொடர்கதையாய் தொடர்கிறது. அவரை ஆண்டிகுவா மற்றும் பார்புடாவிலிருந்து நாடு கடத்த தேவையான அனைத்து ஆவணங்களையும் இந்தியா அனுப்பியுள்ளதாக ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமர் தெரிவித்தார்.

 இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் மெஹுல் சோக்ஸி (Mehul Choksi) தொடர்பான பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மர்மமான முறையில் காணாமல் போனதிலிருந்தே அவரை தேடும் பணியில் இந்திய அதிகாரிகள் முழு முனைப்புடன் ஈடுபட்டிருந்தனர். 

இதற்கிடையில், மெஹுல் சோக்ஸி கைது செய்யப்படபோது அவர் தன்னுடைய காதலியுடன் இருந்திருக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. டோமினிகாவில் கைது செய்யப்பட்டபோது, அவர் தனது காதலியுடன் உல்லாசப் பயணத்தில் இருந்தார் எனும் தகவலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

டொமினிகாவுக்குள் (Dominica) சோக்ஸி சட்டவிரோதமாக நுழைந்ததால் அவரை தாராளமாக இந்தியாவுக்கு நாடு கடத்த முடியும் என்று ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் பிரவுன் சனிக்கிழமை தெரிவித்தார் என்று ஆன்டிகுவா நியூஸ்ரூம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, திரு பிரவுன், டொமினிகா சோக்ஸியை நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் அரசியலமைப்பு உரிமைகளால் பாதுகாக்கப்படக்கூடும் என்பதால் அவரை ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ALSO READ: மெகுல் சோக்ஸியை அழைத்து வர பறந்த தனி விமானம்; ஆன்டிகுவா பிரதமர் கூறுவது என்ன

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நாடு முழுமையாக மதிக்கிறது என்று கூறிய திரு பிரவுன், குற்றவாளிகளை எதிர்த்துப் போராடி அவர்களை தோற்கடிக்கவும், குற்றவாளிகள் தங்கள் குற்றவியல் நடத்தைக்கு பாதுகாப்பு பெற்று அதைத் தொடர வழி வகுக்கும் எந்த வித அரசு சலுகைகளையும் அளிக்காமல் இருக்கவும் நாடுகளின் அரசுகளுக்கு இடையே ஒற்றுமை தேவை என கூறினார். 

"நாம் உலகமயமாக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். இங்கு குற்றவாளிகளை எதிர்த்துப் போராடி அவர்களை தோற்கடிக்கவும், குற்றவாளிகள் தங்கள் குற்றவியல் நடத்தைக்கு பாதுகாப்பு பெற்று அதைத் தொடர வழி வகுக்கும் எந்த வித அரசு சலுகைகளையும் அளிக்காமல் இருக்கவும் நாடுகளின் அரசுகளுக்கு இடையே ஒற்றுமை தேவைப்படுகிறது. அதனால்தான் நாங்கள் அப்படி நடந்துகொள்கிறோம். டொமினிகாவையும் அவ்வாறு நடக்க ஊக்குவிக்கிறோம். சோக்ஸி அவர்களது நாட்டில் சட்டவிரோதமான முறையில் நுழைந்ததால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு நாங்கள் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். 

தப்பியோடியவரைக் கைது செய்வதில், நாடுகளுக்கு இடையிலான  ஒத்துழைப்பின் ஒரு வடிவமாக, சோக்ஸியை நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்க அவர் மேலும் வலியுறுத்தினார்.

"இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நாங்கள் மதிக்கிறோம். தப்பியோடியவரைக் கைது செய்வதில், நாடுகளுக்கு இடையிலான  ஒத்துழைப்பின் ஒரு வடிவமாக, சோக்ஸியை நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று நாட்டின் சார்பாக நான் கோரியது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது" என்று அவர் கூறினார்.

"ஒரு நாட்டில் பெரிய குற்றத்தை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்தவர்களை மற்ற நாடுகள் பாதுகாக்காமல், அவர்களுக்கு அடைக்கலம் அளிக்காமல் இருப்பது நல்லது. இது சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்" என்று அவர் தெரிவித்தார். 

அவர் (மெஹுல் சோக்ஸி) ஆன்டிகுவாவுக்கு நாடு கடத்தப்பட்டால், இங்குள்ள குடியுரிமைக்கான சட்ட மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புகளை அவர் தொடர்ந்து அனுபவிப்பார் என்றும் செய்த குற்றத்துக்கான தண்டனையிலிருந்து அவர் தப்பிவிடக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ALSO READ: மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News