ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தேச துரோக வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நாட்டில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், நமது நாட்டின் நிலைமை இலங்கையை விட மோசமாகிவிடும் என்று மெகபூபா கூறினார்.
பாஜக அரசு சிறுபான்மையினரை குறிவைப்பதாக குற்றம் சாட்டிய அவர், சிறுபான்மையினரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுவதாகவும், இதை நீதித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மெகபூபா கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவுக்கு இது எச்சரிக்கை மணி -மெகபூபா முப்தி:
"நாட்டில் மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், நமது நிலைமை இலங்கையை விட மோசமாக இருக்கும்" என்று மெகபூபா கூறினார்.
மேலும் படிக்க: Sedition Law: தேசத்துரோகச் சட்டத்திற்கு தடை; இனி எஃப்ஐஆர் பதிவு செய்யக்கூடாது
இலங்கையிடமிருந்து மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ளும்:
2014 முதல் இந்தியாவில் வகுப்புவாத வெறி அதிகரித்துள்ளது. இலங்கையில் அரங்கேறி வரும் சூழ்நிலையை பார்த்து பிஜேபி பாடம் கற்றுக் கொள்ளும் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் இனவாத பதட்டத்தை மோடி அரசு தவிர்க்கும் என்றும் நம்புகிறேன் என்றார்.
புல்டோசர் மூலம் சிறுபான்மையினர் குறிவைக்கும் பாஜக அரசு:
சிறுபான்மையினர் தாக்கப்படும் விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களை நீதித்துறை தானாக முன்வந்து எடுத்துக்கொள்வதில்லை என்று மெகபூபா முப்தி தெரிவித்தார்.
தேசத்துரோக வழக்கு விசாரணை:
தேச துரோக வழக்கை தடை செய்யக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பை வழங்கியது. இந்தச் சட்டத்தை ஒரே நாளில் ரத்து செய்ய முடியாது என்றும், மத்திய - மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதே நேரத்தில், 124A-ன் கீழ் புதிய வழக்குகளை பதிவு செய்ய வேண்டாம் என்று அரசுக்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
மேலும் படிக்க: கலவரத்தை அடக்க இலங்கை விரைகிறதா இந்திய ராணுவம்?
இலங்கையில் உச்சக் கட்டப் பதற்றம்:
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, தனது பதவியை திங்கட்கிழமையன்று (2022, மே 9) ராஜினாமா செய்தார். கடந்த 3 மாதங்களாக இலங்கையில் ஆளும் அரசை அகற்றக்கோரி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தனர். போராட்டக்காரர்களின் முகாம்கள் அடித்து நொறுக்கப்பட்டன. திடீரென ஒன்றுக்கூடிய போராட்டக்காரர்கள் ராஜபக்சேக்கு ஆதரவாளர்களின் வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன. ஆளும் கட்சி எம்.பிக்கள் உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் இலங்கையில் உச்சக் கட்டப் பதற்றம் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க: மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்துக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்ததா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR