ஜெய்ப்பூர்: மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (BSP), வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள இந்த இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் தோல்பூர், பாரி, ராம்கர், மஹ்வா, பாயானா மற்றும் ஜல்பராதன் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.
Bahujan Samaj Party (BSP) has released the second list of 6 candidates for the upcoming #RajasthanAssemblyElection2018. pic.twitter.com/CItjWr83Dt
— ANI (@ANI) November 9, 2018
வெளியான பட்டியலைப் பொறுத்தவரையில், தோல்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக பண்டிட் கிஷான் சந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராமெட் குஷ்வாஹா, பாரி தொகுதியில் இருந்து போட்டியிடுகின்றார். முன்னதாக 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இக்கட்சி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், மற்ற சிறுபான்மையினர் பொதுமக்களுக்கு காங்கிரஸ், பாஜக கட்சியால் நடத்தப்படும் அரசாங்கங்களையும் ''தீமை மற்றும் சித்திரவதை'' ஆட்சியினையும் பகுஜன் சமாஜ் கட்சி பொருத்துக்கொள்ளாது என இக்கட்சியில் தலைமை குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே கடந்த அக்டோபர் 3-ஆம் நாள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி விலகி கொள்வதாக அறிவித்தது. இதன்படி வரவிருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் தனித்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. இந்த செயல்பாடானது வருவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் 2019-ல் மூன்றாவது கூட்டணியினை அமைக்கும் திட்டத்திற்கான அடித்தளம் என அரிசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் | 200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில்
- வாக்குப்பதிவு - டிசம்பர் 7, 2018
- வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018