மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா டிவிட்டரில் தீவிரமாக செயல்படுகிறார். இதன் மூலம் பலர், சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் பிரச்னையில் சிக்கியுள்ளவர்களும் டிவிட்டர் மூலம் அவரிடம் உதவி கேட்கின்றனர். அவர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கரன் சைனி என்பவர், சுஷ்மா ஸ்வராஜின் டிவிட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜி டிவிட் ஒன்று பதிவு செய்து உள்ளார். அந்த டிவிட்டுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்துள்ளார்.
கரன் சைனி டிவிட்:- நான் செவ்வாய் கிரகத்தில் சிக்கியுள்ளேன். 987 நாளுக்கு முன்னர் மங்கள்யான் விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உணவு தீர்ந்து வருகிறது. அடுத்த மங்கள்யான் விண்கலம் எப்போது அனுப்பப்படும் எனக் கேட்டிருந்தார்.
@SushmaSwaraj I am stuck on mars, food sent via Mangalyaan (987 days ago), is running out, when is Mangalyaan-II being sent ? @isro
— karan Saini (@ksainiamd) June 8, 2017
சுஷ்மா ஸ்வராஜ் பதில் டிவிட்:- செவ்வாய் கிரகத்தில் நீங்கள் பிரச்னையில் சிக்கியிருந்தாலும், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் உதவி செய்வோம் என பதிலளித்துள்ளார்.
Even if you are stuck on the Mars, Indian Embassy there will help you. https://t.co/Smg1oXKZXD
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 8, 2017
சுஷ்மா ஸ்வராஜின் இந்த பதிலுக்கு சுமார் 3500 பேர் ரீடிவிட் செய்துள்ளனர். 6 ஆயிரம்பேர் லைக் செய்துள்ளனர். சைனியின் டிவிட்டுக்கு பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.