Delhi Metro-வில் ரயில் ஏற வந்த பயணியின் பையில் கட்டு கட்டாய் ரூபாய் நோட்டுகள்: Shock ஆன CISF!!

வியாழக்கிழமை மாலை 5:30 மணியளவில் தாகூர் கார்டன் மெட்ரோ நிலையம் அருகே ஒருவர் பணம் நிறைந்த பையுடன் வந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2020, 08:33 PM IST
  • நாட்டின் தலைநகர் டெல்லியில் மெட்ரோ நிலையத்தில் 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவரை CISF பிடித்தது.
  • விசாரணை மேற்கொண்டதில் இந்த நபர் குஜராத்தின் படானைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
  • நபர் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Delhi Metro-வில் ரயில் ஏற வந்த பயணியின் பையில் கட்டு கட்டாய் ரூபாய் நோட்டுகள்: Shock ஆன CISF!! title=

புதுடெல்லி: கொரோனா காலத்தில் அனைத்து இடங்களிலும் சோதனைகள் கடுமையாகி விட்டன. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சோதனைகள் அதிகரித்துள்ளன. சில சமயம் இப்படிப்பட சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகள் பல அதிர்ச்சிகளையும் ஆச்சாரியங்களையும் சந்திப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்துதான் இங்கே பார்க்கவுள்ளோம்.

நாட்டின் தலைநகர் டெல்லியில் (Delhi) மெட்ரோ நிலையத்தில் 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவரை CISF பிடித்தது. அதன் பின்னர் அதிகாரிகள் அந்த நபரை வருமான வரித் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

ALSO READ: Pressure Cooker-ல் தங்கம்: Viral ஆகும் கேரளாவின் தங்கக் கடத்தல் படங்கள்!!

வியாழக்கிழமை மாலை 5:30 மணியளவில் தாகூர் கார்டன் மெட்ரோ நிலையம் (Metro Station) அருகே ஒருவர் பணம் நிறைந்த பையுடன் வந்தார். அந்த நபர் தனது பையை மெட்ரோ வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல, கேட் அருகே அமைந்துள்ள எக்ஸ்ரே இயந்திரத்தில் வைத்தார். அந்த இயந்திரத்தில், ஸ்கேனிங்கின் போது விசாரணை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்கள் வந்தன. அதன் பிறகு அந்த நபரின் பையில் சோதனை செய்யப்பட்டது. அதில் 500 ரூபாய் நோட்டுகளின் பல கட்டுகள் கிடைத்தன.

இதன் பின்னர், CISF அதிகாரிகள் அந்த நபரிடம் பணம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் எந்தவொரு கேள்விக்கும் அவரால் திருப்திகரமான பதிலைக் கொடுக்க முடியவில்லை. அஜ்மல் என்ற அந்த நபரின் பையில் சுமார் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விசாரணை மேற்கொண்டதில் இந்த நபர் குஜராத்தின் படானைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரை CISF வருமான வரித் துறையிடம் (Income Tax Department) ஒப்படைத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ: மீண்டும் தலை தூக்கும் 2019 ‘Cash for Vote ’ மோசடி:திமுக-வினர், வங்கி அதிகாரி மீது வழக்கு!!

Trending News