மம்தா பானர்ஜி தலைமையில் பாஜவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2019, 11:04 AM IST
மம்தா பானர்ஜி தலைமையில் பாஜவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி title=

இதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் நடைபெற உள்ளது. அதற்க்கு "ஒற்றுமை இந்தியா மாநாடு" என்று பெயர் வைத்துள்ளனர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆந்திர முதல்வர், டெல்லி முதல்வர், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், தேவகவுடா மற்றும் காஷ்மீர் தலைவர்கள் உட்பட ஏறக்குறைய பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் கலந்துக்கொள்கிறது. மேலும் இந்த கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோரும் பங்கேற்கின்றன. 

இந்த கூட்டம் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரசாரம் மற்றும் வியூகங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. இந்த கூட்டம் மூலம் மக்களவை தேர்தலில் பெரும் திருப்புமுனையை ஏற்ப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Trending News