ராகுல் ஒரு குழந்தை, அவர் குறித்து நான் எந்த கருத்தும் கூறமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தெரிவித்துள்ளார்!!
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் மேற்குவங்கத்தில், விவசாயிகளுக்குத் தேவையான எந்த திட்டங்களையும் மம்தா அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. மக்கள் நலப் பிரச்சனைகள் உட்பட எதற்காகவும் மம்தா பானர்ஜி யாருடனும் பேசுவது கிடையாது. யாருடைய பரிந்துரைகளையோ, கோரிக்கைகளையோ ஒருபோதும் அவர் ஏற்பதில்லை என்று மம்தாவை கடுமையாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மேற்குவங்க அரசு குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு மம்தா பானர்ஜி இன்று தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தாவிடம், பிரதமர் வேட்பாளராக கருதப்படும் ராகுல் தங்கள் அரசு குறித்து குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ராகுல் ஒரு குழந்தை, அவர் குறித்து நான் என்ன கூறுவது?. ராகுல் காந்தியை பாஜகவினர் ஏற்கனவே இதேபோல் 'பப்பு' என்று விமர்சித்து வருகின்ற நிலையில் மம்தாவும் அவரை குழந்தை என விமர்சித்துள்ளார்.
West Bengal CM & TMC leader Mamata Banerjee on Rahul Gandhi's statement in Malda criticising her: A small boy had said something. I will not comment on that.
(27.03.19) pic.twitter.com/XXQCsCghOL— ANI (@ANI) March 28, 2019
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ராகுல் காந்தி டெல்லி மற்றும் மேற்குவங்கத்தில் கூட்டணி உடன்பாடு மேற்கொள்ளாமல் இரண்டு மாநிலங்களிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறார். அதன் காரணமாகவே பிரதமர் மோடியையும், மம்தாவையும் ஒரே மேடையில் ராகுல் விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது.