கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையா; திருடன் என கூச்சலிட்ட ரசிகர்கள்

லண்டனில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை போட்டியை காண வந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா!!

Last Updated : Jun 10, 2019, 09:05 AM IST
கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையா; திருடன் என கூச்சலிட்ட ரசிகர்கள் title=

லண்டனில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை போட்டியை காண வந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா!!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியைக் காண வங்கி பண மோசடி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா வந்திருந்தார். அவர் தான் இங்கு கிரிக்கெட் போட்டியை காண வந்துள்ளதாகக் கூறிவிட்டு மைதானத்துக்குள் சென்று போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தார். 

இதை தொடர்ந்து அவரைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை திருடன் என்று கூறி திட்டி கூச்சலிட்டனர். இதையடுத்து, போட்டி முடிந்து வெளியே வந்த அவர் "என்னுடைய தாய் காயமடையவில்லை" என்று உறுதி கூறினார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; "டோர்செட் தெருவில் நாளை திறந்திருக்கும் ஊட்டி நிலையம். முன்னோட்டத்திற்காக அழைக்கப்பட்டார். விளையாட்டுப் பார்வை முழுவதும் சூப்பர். சிறந்த தென்னிந்திய உணவு மற்றும் அற்புதமான கிரிக்கெட் பார்த்து ஒரு கவர்ச்சியான காக்டெய்ல் பட்டியல் அனுபவித்து. ஒரு பிரீமியம் விளையாட்டு பார் மற்றும் விருது பெற்ற உணவு அனுபவிக்க லண்டனில் இருக்கும் ஒரே இடம்" என அதில் குறிப்பிட்டுள்ளார். 

Trending News