தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் மக்களின் காலனிகளை பாலிஷ் செய்யும் வேட்பாளர்

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் மக்களின் காலனிகளை பாலிஷ் செய்யும் வேட்பாளர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2018, 07:35 PM IST
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் மக்களின் காலனிகளை பாலிஷ் செய்யும் வேட்பாளர் title=

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கடவுளை விட குறைவான விசியம் கிடையாது என்பதற்கு பல சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்தல்களில் வெற்றி பெற வழிகள் பல வழிகளை வேட்பாளர்கள் கையாளுகின்றனர். ஆனால் தேர்தலுக்குப் பிறகு பொதுமக்களை மறந்துவிடுவது வேட்பாளரின் பழக்க வழக்கமாகவே உள்ளது.

ஆனால் நண்பர்களே... ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தின் மகுவா தொகுதியின் எம்.எல்.ஏ. வேட்பாளர் ஓம் பிரகாஷ் ஹுட்லா தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் மக்களை சந்தித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் மக்களை ஈர்ப்பதற்காக அவர் புதிய வழிகளைப் பின்பற்றுகிறார். 

ஓம் பிரகாஷ் ஹுட்லாவுக்கு பிஜேபி சீட் தர மறுத்துவிட்டது. ஆனால் சுயேச்சையாக நின்று மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தந்த மக்களை மறக்காமல், அவர்களுக்கு சேவை செய்யும் விதத்தில் தினமும் மக்களை சந்தித்து வருகிறார்.

அவர் மக்கள் கூடும் இடமான சந்தைக்கு சென்று ஒரு காய்கறி கடையில் உட்கார்ந்து காய்கறிகளை விற்பனை செய்தார். அதேபோல இன்று மகுவாவில் சந்தைக்கு சென்ற ஓம் பிரகாஷ் ஹுட்லா, செருப்பு தைக்கும் கடையில் அமர்ந்துகொண்டு மக்களின் காலணிகளுக்கு பாலிஷ் செய்துக் கொடுத்தார். இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட மக்கள், ஓம் பிரகாஷ் ஹுட்லாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுக்குறித்து ஓம் பிரகாஷ் ஹுட்லாவிடம் கேட்டபோது, எனக்கு சீட் கிடைக்காதபட்சத்திலும், சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக நின்ற என்மீது நம்பிக்கை கொண்ட மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர். என்னை வெற்றி பெற செய்த அவர்களுக்கு சேவை செய்வதே என் கடமை. மக்களுக்கு சேவை செய்வது பாக்கியமாக நினைக்கிறேன் என்றுக் கூறினார்.

Trending News