சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், புண்டேகாந்த் பகுதியில், புதிய மாவட்டத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது!
இன்று மத்திய பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, திவால்கர் மாவட்டத்தில் இருந்து 'நிவாரி' என்ற புதிய மாவட்டத்தை உறுவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புது மாவட்டமானது மத்தியப் பிரதேசத்தின் 52 மாவட்டமாக உறுவாகிறது.
இந்த புதிய மாவட்டத்தை உருவாக்கிய பின்னர் 60 நாட்களுக்கு, பொதுமக்களிடம் இருந்த ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்க்கப்படும். இந்த பரிந்துரைகளின் பேரில் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டத்தில் தற்போதைய திமாம் கர் மாவட்டத்தின் நிவாரி, ஓச்சா மற்றும் ப்ரித்விபூரின் மூன்று தாலுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
நிவாரி நகரில் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு தனி மாவட்டம் வேண்டும் என கோரிக்கை வைத்து வந்ததன் அடிப்படையில் இந்த தனி மாவட்டத்தை மத்திய பிரதேச அரசு உறுவாக்கியுள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லை உத்திர பிரதேசத்தின் எல்லை வரையில் நீண்டு இருக்கும் என அரசுகுறிப்பு தெரிவிக்கின்றது.