MP-ல் அரசியல்வாதிகளை விட அவர்களின் மனைவிகளின் வருமானம் அதிகம்!

மத்திய பிரதேசத்தில் அரசியல் தலைவர்களை விட அவர்களின் மனைவிகளின் சொத்து மதிப்பும், ஆண்டு வருமானமும் தான் அதிகம்...

Last Updated : Nov 10, 2018, 03:55 PM IST
MP-ல் அரசியல்வாதிகளை விட அவர்களின் மனைவிகளின் வருமானம் அதிகம்!   title=

மத்திய பிரதேசத்தில் அரசியல் தலைவர்களை விட அவர்களின் மனைவிகளின் சொத்து மதிப்பும், ஆண்டு வருமானமும் தான் அதிகம்...

மத்தியப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க பலரும் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் தேர்தல் கமிஷனிடம் தங்கள் சொத்துகள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களின் விவரப்படி, பெரும்பாலான அரசியல்வாதிகளை விட அவர்களுடைய மனைவிகள் அதிக ஆண்டு வருவாய் ஈட்டுவது தெரியவந்துள்ளது.

பாஜக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் ஆண்டு வருவாய் 19 லட்சத்து 70 ஆயிரமாகவும், அவரது மனைவி சாதனா சிங்கின் வருவாய் 37 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. பாஜக வேட்பாளர் ராஜேந்திர சுக்லாவின் ஆண்டு வருமானம் 6 லட்சத்து 60 ஆயிரம் என்றும், அவரது மனைவி சுமித்ரா சுக்லாவின் வருவமானம் 26 லட்சத்து 44 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று அமைச்சர் பூபேந்திர சிங்கின் மனைவியின் வருமானம் ரூ.4.5 கோடியாகவும், அமைச்சரின் வருமானம் ரூ.97 லட்சமாகவும் உள்ளது. அமைச்சர் ரானேந்திர சுக்லாவின் ஆண்டு வருமானம் ரூ.6.6 லட்சமாகவும், அவரது மனைவியின் வருமானம் ரூ.26.66 லட்சமாகவும் உள்ளது. ஆளுங்கட்சியில் மட்டுமல்ல எதிர்க்கட்சியான காங்கிரசிலும் மனைவிகளின் வருமானமே அதிகமாக உள்ளது.

இதேபோல், காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரது மனைவிகளுடைய ஆண்டு வருமானமும், பன்மடங்கு அதிகமாக உள்ளது. 

 

Trending News